தொடர் தாக்குதலை கண்டித்து நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பந்த் நடத்த இந்துமுன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் முருகானந்தம் கோவையில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழ்புத்தாண்டு தினத்தில் நடந்த இந்துமுன்னணி பொது கூட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய நீலகிரி மாவட்டசெயலாளர் மஞ்சு நாதனை சிலர் கொலைசெய்யும் நோக்கத்தில் தாக்கியுள்ளனர். அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 16-ந் தேதி குன்னூரில் இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் ஹரிகரன் மற்றும் நிர்வாகிகள் ஜெயக்குமார், வெங்கட்ராஜ் ஆகிய 3பேர் மீதும் தாக்குதல் நடை பெற்றுள்ளது. இதில் பலத்தகாயம் அடைந்துள்ள 3 பேரும் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
இந்துக்கள் மீதான தாக்குதல்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கு காரணமானவர்களின் மீது காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
கோவை குனிய முத்தூரில் சிலையை உடைத்தவர்களையும் கைதுசெய்யவில்லை. எனவே இந்துக்கள் மீதான தொடர்தாக்குதலை கண்டித்தும், காவல்துறையினர் உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரியும் இந்து முன்னணி சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி இலிருந்து மாலை 6 மணிவரை கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்த படுகிறது.
இந்தசம்பவங்களில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும், அது வரை இந்துமுன்னணி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.