சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு . லிங்கம் தொடர்பானதில் பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ இலைகள் ஆகும் . இந்த வில்வ தழைகள் கிடைப்பதற்காக அனேகமாக ,சிவன் கோவில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப் படும் .வில்வம் குளிர்ச்சியூட்டும்
குணமுடையது அதாவது இதை உண்டால் உடலாகிய பஞ்ச பூதம் வெகு எளிதில் அதிக சக்தியை செலவழிக்காமல் ஜீரணம் செய்த சக்தியும் சேமிப்பாகும் .சிவத்துக்குள் சக்தியை அதிகம் சேமிக்க செய்யும் ஒரு மூலிகையாக இது இருப்பதால் இது ஈசார்சனைக்குமிக உகந்ததாகும்.இதனை "சிவமூலிகைகளின் சிகரம்" எனவும் அழைப்பர் .
இந்த இலைகளை கொண்டு ஈசனை பூஜிப்பதால் சகல பாவங்களும் நீங்கும் இந்த வில்வ மரத்தினை வளர்ப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் .ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும் .புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும் .காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும் .
வில்வ மரத்தில் அபார மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.வில்வ காயை பறித்து பார்த்தால் ,உருண்டையாகவும் ஓடு கடினமாகவும் வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டது .இதன் பழமானது குடற் கோளாறுகளை நீக்கவும்,மலக்கட்டை நீக்கி உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.
வில்வ இலை கசாயம் பருக கைகால் பிடிப்பு, உடல் வலி முதலியவை குறையும் மேலும் இந்த கசாயமானது கபம், மூச்சுத் திணறல் , பித்தம் போன்றவையை குணமாக்கும் .அது போல இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள உடல் பகுதியில் ஊற்றினால் அவை குறைந்து விடும் ., இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்புகுணப்படுத்தப்படும்.
வில்வ வேர் கஷாயம் பருக அது நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வை போக்கி சாந்தமடையும் செய்யும் தன்மை கொண்டதாகும்
ப்ரோட்டின், கொழுப்பு. கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்பு, உலோகச்சத்து , மாசத்து , கலோரி போன்றவை ஆப்பிள் , மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட வில்வ பழத்தில் அதிகமாக உள்ளது என்பது வியக்க தக்கதே.
ஆரோக்கியத்திற்கு அரணாகவும் ,ஆன்மீகத்தில் முக்கிய இடம் பெற்றும் இருப்பதுமான வில்வமரத்தை புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.