மாதச் சம்பளம் பெறும் தனிநபர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் விதமாக, புதிய வரி நடைமுறைகள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிரந்தர கழிவு, 50,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப ஓய்வூதியத்திற்கான கழிவு 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 4 கோடி தனிநபர்களும், ஓய்வூதியர்களும் பலன் அடைவார்கள்.
புதிய வரி நடைமுறைகளின்படி, ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை. 3 முதல் 7 லட்சம் ரூபாய் வரை 5 சதவீத வரியும், 7 முதல் 10 லட்சம் ரூபாய் பெறுவோருக்கு 10 சதவீதமும், 10 முதல் 12 லட்சம் ரூபாய் பெறுவோருக்கு 15 லட்ச ரூபாயும், 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், 15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30 சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும். இதன் மூலம் மாதச்சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு புதிய வரி நடைமுறையின் படி ரூ. 17,500 சேமிப்பாக கிடைக்கும்.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |