”தமிழகத்திற்கு எவ்வளவு நிதி கொடுத்தாலும், சில பேருக்கு காரணமே இன்றி அழும்பழக்கம் இருக்கிறது. அவர்கள் அழுது கொண்டே இருக்கட்டும். அவர்களால் அழத்தான்முடியும்; அழுதுவிட்டு போகட்டும். 10 ஆண்டுகளில், தமிழகத்திற்கு மூன்று மடங்கு நிதிகொடுத்திருக்கிறேன்,” என, ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். ‘மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை’ என, தி.மு.க., அரசு தொடர்ந்துகுற்றச்சாட்டு கூறி வருவதற்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு மோடி தெரிவித்தார்.
ராமேஸ்வரம் பாம்பனில், 550 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தை,பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.தவிர விழுப்புரம் — புதுச்சேரி, பூண்டியங்குப்பம் — சட்டநாதபுரம் பிரிவு, சோழபுரம் — தஞ்சாவூர் பிரிவு நான்குவழிச்சாலை திட்ட பணிகளையும் துவக்கி வைத்து பேசியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பாகி இருக்கிறது. ரயில், சாலை,விமானம், துறைமுகம், மின்னாற்றல், எரிபொருள் அளவை, ஆறு மடங்கு உயர்த்தியுள்ளோம். தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு, மத்திய அரசின் பங்கு முக்கியமானது.கடந்த, 10 ஆண்டுகளில் தமிழகத்தின் ரயில்வே நிதி ஒதுக்கீடு ஏழு மடங்கிற்கும் அதிகமாகஅதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி கொடுத்தாலும், சில பேருக்கு காரணமே இன்றி அழும் பழக்கம் இருக்கிறது. அவர்கள் அழுதுக்கொண்டே இருக்கட்டும். அவர்களால் அழத்தான் முடியும்.அழுதுவிட்டு போகட்டும்.
கடந்த, 2014க்கு முன்பை விட, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மூன்று மடங்கு நிதி வழங்கப்பட்டுஉள்ளது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு இது மிக அதிக உதவி. தி.மு.க., கூட்டணிஆட்சியின் போது ரயில்வே திட்டங்களுக்கு, 900 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. நாங்கள், 6000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். ராமேஸ்வரம் உட்பட, 77 ரயில் நிலையங்களைநவீனப்படுத்தும் பணி நடக்கிறது
கடந்த, 10 ஆண்டுகளில் இந்தியா சமூக உட்கட்டமைப்பு வசதிகளில் இதுவரை இல்லாத அளவு முதலீடு செய்துள்ளது. எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தின் கோடிக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கும், இதன் பலன் கிடைக்கிறது. நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகள் நாடு முழுவதும் ஏழை குடும்பங்களுக்கு கிடைத்துள்ளன. பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் கீழ்,12 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு கிடைத்துள்ளது.10 ஆண்டுகளில் கிராமங்களில், 12 கோடி குடும்பங்கள் முதன்முறையாக குழாய் மூலம் குடிநீரை பெறுகிறார்கள். இதில், 1.11 கோடி குடும்பங்கள் தமிழகத்தை சேர்ந்தவை.
மக்களுக்கு தரமான மருந்து வழங்குவது அரசின் கடமை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 8,000 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது. தமிழகத்தில், 1,400க்கும் அதிகமானமக்கள் மருந்தகங்கள் உள்ளன. இங்கு, 80 சதவீத தள்ளுபடியில் மருந்து கிடைக்கிறது. இதன் வாயிலாக, 700 கோடி ரூபாய் மிச்சமாகி இருக்கிறது.
இளைஞர்கள் மருத்துவம் படிக்க வெளிநாடுளுக்கு செல்லக்கூடாது என்பதற்காக, தமிழகத்தில், 11 மருத்துவ கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. ஏழை மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பு கிடைக்கும் வகையில், பாடத்திட்டங்களை தமிழில் கொண்டு வர, மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். மீனவர்கள் துாக்கு மேடையை முத்தமிட சென்ற காலக்கட்டத்தில், அவர்களை மத்திய அரசு மீட்டுள்ளது. இதுவரை, 3,700க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஓராண்டில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளோம்.
எனக்கு சில தலைவர்கள் தமிழகத்தில் இருந்து கடிதம் எழுதுவது ஆங்கிலத்தில் இருக்கும். கையெழுத்து கூட ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். தமிழ் மொழியில் போடக்கூடாதா என, நான் வியப்பதுண்டு. சக்தி, தன்னிறைவு கொண்ட பாரதம் என்ற லட்சியத்திற்காக நாம் பயணிக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன் இப்பாலத்தை கட்டியவர் குஜராத்தைச் சேர்ந்தவர். இன்று திறந்து வைத்ததும், குஜராத்தில் பிறந்த நான். இவ்வாறு மோடி பேசினார்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |