சமயவகுப்பு பலபேருக்கு தெரிந்திருக்காது , ஆனால் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் . இன்றைய கால கட்டத்தில் ஆன்மீகத்தின் அடிப்படை சித்தாந்தம்தான் சமயவகுப்பு . கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள் , சமயவகுப்பு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கின்ற புதுமொழியை நிரூபிக்க காத்திருக்கிறது குமரி மாவட்டம் .
1984-இல் சமயக் கல்வியை போதிக்கும் 'ஹிந்து தர்ம வித்யாபீடம்' நிறுவப்பட்டது.இப்போது அதனை நிர்வகித்து வருபவர் சுவாமி சைதன்யாநந்தஜி மகராஜ் .தொடக்க நிலை ,இளநிலை , வளர்நிலை , உயர்நிலை ,முதுநிலை என்கின்ற 5 நிலைகளில் ஆன்மிகம் கற்பிக்க படுகிறது . அணைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வித்யாஜோதி பட்டம் வழங்க படுகிறது .
சுதந்திரத்திற்கு பிறகும் , அதற்க்கு முன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற பட்டார்கள் . மாற்றத்திற்கான காரணம் வறுமை , இந்துக்களின் வறுமையை பயன்படுத்தி பல கிறிஸ்துவ மதம் மாற்று நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பணத்தை வாரி இறைத்தனர் .நாம் இன்று காணும் கிறிஸ்துவர்கள் அனைவரும் நேற்று கூழுக்கும் சுண்டலுக்குமாய் மதம் மாறி போன நம் முன்னோரின் பிள்ளைகள் . இறந்து பொன அம்முன்னோர்கள் தான் தெய்வங்கள் என்கின்ற புனிதத்தை கிறிஸ்துவம் விழுங்கி விட்டது . இதானால் பாதிக்க பட்ட மாவட்டங்களில் முதலிடம் குமரி மாவட்டம் .
இன்னும் மாவட்டத்தில் 37 % பேருக்கு மேல் கிறிஸ்துவர்கள் தான் . அரசியல் ரீதியாக MLA , MP க்களை கூட இன்னும் குமரியில் கிறிஸ்துவர்களே தீர்மானிக்கிறார்கள் .பல மதமாற்றங்களை , மத வன்முறைகளை , பல கலாசார , பண்பாட்டு சீரழிவுகளை சந்தித்து வந்த குமரி இன்று சமய வகுப்பின் மூலமாக கம்பீரமாய் எழுந்து நிற்கிறது .
இளம்வயதிலேயே ஆன்மீக நட்டம் கொண்டு ஞாயிற்று கிழமைகளில் கம்பீரமாக சமயவகுப்பிர்க்கு நடக்கும் மாணவர்களை பார்க்கும் போது அவ்வளவு அற்புதமாக இருக்கிறது . கிறிஸ்துவத்தை பார்த்து அவர்களின் ஆடை அலங்காரத்தை பார்த்து வியந்து நின்ற மக்கள் , இன்று சமவகுப்பின் மூலம் நம் தர்மத்தின் புனிதத்தை உணர்ந்து மத மாற்றத்தினை காறி உமிழ்கிறார்கள் .
கன்னியாகுமரி மாவட்டத்தில் 810 சமயவகுப்புகள் நடந்து வருகின்றன. சென்னை, கோவை, ஈரோடு, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் 70 வகுப்புகளும், கேரளாவில் 60 வகுப்புகளும், ஸ்ரீலங்காவில் சில வகுப்புகளும் நடந்து வருகின்றன .நம்பினால் நம்புங்கள் கடந்த ஆண்டு மட்டும் 17000 மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள் . ராமாயணமும் , மகாபாரதமும் , நம் தர்மத்தின் உயர்ந்த சிந்தனையும் , நம் பண்பாடும் கலாச்சாரமும் மாணவர்களின் மூச்சாக இப்போது கலந்திருக்கிறது . இனிமேல் எந்த சக்தியும் நம்மை அசைத்து பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு நம் தர்மத்தின் ஆணி வேர் மாணவர்களிடம் ஊன்றப்பட்டுள்ளது .
இப்போது விழிப்புணர்வு வந்து மதமாற்றம் தடுக்கபடுகிறது , நம்மை கிண்டல் செய்யும் மாற்று மதத்தவர்களுக்கும் , போலி முற்போக்கு , பகுத்தறிவு வாதிகளுக்கும் நம் மாணவர்களே தக்க பதிலடி கொடுக்கிறார்கள் .ஜாதி ஏற்றத் தாழ்வுகள் வேரறுக்கப்படுகின்றன. மனிதாபிமானம் பெருக்கெடுத்து ஓடுகிறது . பிராமணன் என்பதை பிறப்பை வைத்து முடிவு செய்வதில்லை என்னும் அடிப்படை இந்துத்துவம் கற்பிக்க படுகிறது .எந்த வித பலனையும் எதிர்பார்க்காமல் இந்த சீர்மிகு ஆன்மீக பணியை சிறப்புடன் செய்யும் சமயவகுப்பு ஆசிரியர் மற்றும் ஆசிரியை களுக்கு என்னுடைய பலத்த கைதட்டலை சமர்பிக்கிறேன் .
குமரி மாவட்டத்தை போல் மற்ற மாவட்டங்களிலும் சமயவகுப்புக்கள் விரிவு படுத்த வேண்டும் . சொல்லுங்கள் நண்பர்களே , உரக்க சொல்லுங்கள் நம்மை ஏளனமாய் நினைத்தவர்கள் காதுகளில் சமயவகுப்பு எங்கள் அடிப்படை உரிமை . அனுப்புங்கள் தோழர்களே உங்கள் வீட்டு குழந்தைகளையும் சமய வகுப்பிற்கு . இனிமேல் ஆயிரம் முறை ஆங்கிலேயன் படை எடுத்தாலும் , நம் விரல் நுனியை கூட அசைத்து பார்க்க முடியாது .
நம் தர்மத்தை கொஞ்சமும் சிதைத்து பார்க்க முடியாது .வாருங்கள் நண்பர்களே முட்டி மோதியே திறவா கதவை மூளை பலத்தால் சிதறடிப்போம் . கேள்விகள் கேட்க்க ஆளில்லை என்ற கிறுக்கர்கள் மதமாற்றத்தை வென்றெடுப்போம் .அன்பே ஆழ வந்தால் அழிவுக்கெல்லாம் முடிவு வரும் .
என் எழுத்துக்களுக்கு , என் சிந்தனைகளுக்கு ,கொஞ்சமாய் என் தேசப்பற்றுக்கும் , என் சமூக அக்கறைக்கும் ஓட்ட மொத்த காரணமும் சமயவகுப்பு தான் . முன்னாள் சமயவகுப்பு மாணவி என்கின்ற முறையில் —- ஆர்த்தி
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.