விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு உணவுச்சத்துகளும், கலோரி அளவும் உணவில் இருக்கின்றபடி பார்த்துக் கொள்வது மிக அவசியமாகிறது.
இவர்கள் தினமும் மற்றவர்களைப் போல மூன்று நேரமும் அதிக உணவை உட்கொள்ளாமல்,குறைந்த உணவைப் பலமுறை இடைவெளி விட்டு உண்பது நல்லது. இவர்கள் தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறைக்குப் பதிலாக ஐந்து முறை உணவு உண்பது நல்லது.
இவர்கள் அதிக அளவு கார்-போ-ஹைட்ரேட் உணவைச் சாப்பிடுவதால் போதுமான சக்தியை அவர்களுக்குத் தருகிறது.
இவர்கள் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடுகின்ற போதிலும் கோடைகாலங்களில் அதிகநேரம், தாது உப்புகளும் வெறியேறும். எனவே, இவர்கள் விளையாட்டின் முன்பும்… இடையிடையேவும் தாது உப்புகளை பானங்களை, பழ ரசங்களை பருகுவது நல்லது.
இவ்வாறு பருகும் பானங்களில் குளுக்கோஸ் சர்க்கரை சத்து, வைட்டமுன் 'சி' ஆகியவை நிறைந்து இருந்தால் அவை இவர்கள் விளையாட்டின் திரத்தை அதிகரிக்க உதவும்.
விளையாட்டு வீரர்கள் பொதுவாக காப்பி, தேநீர், மது ஆகியவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. இவை ஆரம்பத்தில் உற்சாகம் தருவதுபோலத் தோன்றினாலும் பிறகு உடல் தசைகள் மற்றும் இயக்கங்களைப் பாதித்தித் தடை செய்வதால் உடல் வேலை செய்யும் திறன் குறைந்து விடுகிறது.
தினமும், இவர்களுக்கு 3000 முதல் 3500 வரை கி.கலோரி, உணவு தேவைப்படுகிறது. இவர்கள் தாராளமாகப் பழங்கள், பழரசங்கள், கரும்பு, குளுக்கோஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலில் சென்று விளையாடுகின்ற போது செலவாகும் அதிகமான சக்தி இழப்பைச் சரிசெய்கின்றன. இதை விளையாட்டிற்கு முன்பும், அதன் பிறகும் பயன்படுத்தலாம். இத்துடன் புரோட்டீன், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவற்றையும் போதுமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பல்வேறு வைட்டமின் நிறைந்த மாத்திரைகளையும் இவர்கள் சாப்பிடலாம். இதன் மூலமாக அதிகப்படியாகத் தேவைப்படும் வைட்டமின் சத்து இவர்களுக்குக் கிடைக்கிறது.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.