மாவோயிஸ்டுகள்..வர்க்கப் போராளிகளா?—தேசவிரோதிகளா?—பயங்கரவாதிகளா?-

 மே மாதம் 25 ந்தேதி சட்டீஸ்கர் மாநிலம், பஸ்தார் ஜில்லாவில் "பரிவர்த்தன் யாத்திரை " சென்று கொண்டிருந்த காங்கிரஸ் பிரச்சார குழு மீது , நக்சலட்டுகள் தாக்குதல் நடத்தி 27 பேரை கொன்றனர்..அவர்களில் முக்கியமானவர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன், எதிர்கட்சி தலைவர்

மகேந்திரகர்மா, மற்றும் உயிருக்கு போராடிவரும் மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் வி.சி.சுக்லா அடங்குவர்.

இந்த கொடூர தாக்குதல் நமக்கு பல முக்கிய விஷயங்களை வெளிப்படுத்துகிரது..

1.சுக்மா மாவட்ட தமிழ் கலக்டரை கடத்திய பின்பு நக்சலைட்டுகள் மறுபடியும், "ஒன்று கூடிவிட்டார்கள்" என்பது புரிகிறது.

2.."வர்க்க விரோதி" என தாங்கள் அடையாளப்படுத்திய காங்கிரசின் தலைவர்கள்.."நந்தகுமார் படேல், மற்றும் மகேந்திர கர்மா" ஆகியோரை தனிமைப்படுத்தி கொன்றிருக்கிறார்கள்.

3…மிகவும் ஆபத்தான நக்சலைட்டுகள் நடமாடும் பகுதியில்," பெரிய விளம்பர தம்பட்டம் அடித்துக்கொண்டு, "தங்கள் வருகையை காங்கிரஸ் முன்கூட்டியே தெரிவித்தது, நக்சலைட்டுகளுக்கு வசதியாய் போய்விட்டது..

4..மாநில உளவுப்பிரிவு போலிசாரின் தோல்விகள் என்ன…பாதுகாப்பில் ஓட்டைகள் எங்கெங்கு..என்பதை கண்டுபிடிக்க கமிஷன் அமைத்து, தைரியமாக ..வெளிப்படையாக அறிவித்த சத்தீஷ்கர் முதல்வர் ராமன் மாறுபட்டவர்..

5..இவைகள் ஒருபக்கம் இருந்தாலும், "இதை அரசியல் ஆக்கவேண்டாம்…" என்ற கோரிக்கையோடு, காங்கிரஸ் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முதல்வர் ராமன் சிங்..அவரது கட்சிதலைவர் ராஜ்நாத் சிங் ஒருபடி மேலே போய் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்கு சென்று இரங்கல் கேட்டது நம் தமிழ்நாட்டு அரசியலை உற்றுப்பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது..

மறு பக்கம், சரியான பாதுகாப்பு தராததால்தான் தங்களது தலைவர்கள் கொல்லப்பட்டனர், என்ற கோஷத்தோடு, சட்டீச்கர், ம.பி.யில் பந்த் நடத்திய காங்கிர்ஸ்..சோக மூஞ்சியோடு பத்திரிக்கைகளில் வெளிவந்த ராகுல், சோனியா படங்கள், என வருந்துதலுக்குறிய நிகழ்வுகள்..

நக்சலைட்டுகளின் இந்த திடீர் எழுச்சிக்கு காரணம் என்ன?

மலை வளங்களியே நம்பியிருக்கும், மலைவாழ் மக்களுக்கு கடந்த 60 ஆண்டுக்ளாக ஆட்சிபுரியும் காங்கிரஸ் அர்சு செய்யத்தவறிய முன்னேற்ற திட்டங்களால் நக்சலைட்டுகள் கிராமங்களை கைய்யிலெடுத்துள்ளனர்.

மலைகளிலும் காடுகளிலும் கொழிக்கும் இயற்கை வளங்கள், தாதுக்கள், இரும்பு, தாமிரம், அலுமினியம், நிலக்கரி, போன்றவற்ரை, ஏகபோகமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கி, காடுகளையே நம்பி இருக்கும், வனவாசிகளை வஞ்சிக்கும், ஆளும் அரசின் செயல்களே,"" நக்சலைட்டுகளை வளர்த்திவிடும்" "மய்யங்கள்"..

மலைவாழ் மக்களை ஒரு சிறு புழு அளவுக்குக்கூட ஆளும் அரசு மதிக்காத காரணத்தால், அவர்கள் "நக்சல்கள் "பாதையில் பயணிக்க " சம்மதிக்கின்றனர்..

இந்த 2013 ஆம் ஆண்டில்,ஆயுதம் ஏந்திய போராட்டத்தால், ஆட்சிமாற்ரம் செய்யமுடியும், என்ற தத்துவத்தை உலகின் எந்த நாடும், எந்த பகுதியும் ஏற்றுக்கொள்ளவில்லை..என்பதே இன்றைய சூழல்..

1920 இல், ரஷ்யாவில் தோன்றிய கம்யூனிசம், அது தோன்றிய நாட்டிலேயே அது அழிந்துவிட்டது..அதை தீவிரமாக அனுசரித்த, சீனாவிலும் அது நீர்த்துப்போய்விட்டது..அதனாலேயே சீனா உலகின் வளர்ச்சியடைந்த முதல்நிலை நாடாகிவருகிரது..

மாற்ரத்தை வரவேற்கும் இந்தியாவில், உலகம் ஏற்கமறுத்த "ஆயுத புரட்சி தீவிரவாத கம்யூனிசம்" இன்னும் இந்திய காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிரது..அதற்கு காரணம் இதுவரை இந்தியாவை ஆண்ட—ஆளும் கட்சிதான்..

"இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்பேன்" என்ற திராவிட இயக்கங்களின் கோஷம் தோற்றுவிட்டது…ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை, நக்சல்பாரிகளும், மாவோயிஸ்டுகளும், நம் காடுகளில் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்..

மாவொயிஸ்டுகள்.. நக்சல் வர்க்கத்தின் போராளிகளா? ஆயுதம் வாங்கபொருள்-சேர்க்க..ஐ.எஸ்.ஐ..மற்றும் சீனாவுடன் கைகோர்க்கும் தேசவிரோதிகளா?

வர்க்க போராட்டத்தில்..வர்க்க எதிரிகளை அழிக்க தன் வர்க்கத்தையெ அழிக்கும் பயங்கரவாதிகளா? இம்மூன்றும் சேர்ந்த"கலவை"–மூளை.."சலவை" செய்யபட்டதால் விளைந்த"நிலமை"

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...