சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு பருகினால் விந்து உற்பத்தியாகி ஆண்மை பெருகி மலட்டுத்தன்மை நீங்கும்.
கண் நோய்களுக்கும், பார்வைத் திறனுக்கும் நெல்லியைக் கொண்டு நிவாரணம் பெறலாம். மலச்சிக்கல் நீங்க பெரிதும் உதவுகிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. குன்மம் அல்லது நீடித்த செரிமானமின்மைக்கு நல்ல மருந்து. மஞ்சள் காமாலை நோயையும் தீர்க்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். இதயத்திற்கு வலுவைச் சேர்க்கும்.
நெல்லிக்கனியில் வைட்டமின் 'சி' சத்தை நீண்ட காலம் தேக்கியிருக்கும். நிழலில் உலர்த்தப்பட்டால் இதிலுள்ள வைட்டமின் 'சி' சத்துக் கூடும். உலர்த்தப்பட்ட நெல்லிகனியில் 2400 மில்லி கிராம் முதல் 2600 மில்லி கிராம் வரை – 100 கிராமுக்கு என்ற கணக்கில் வைட்டமின் 'சி' இருக்கும்.
ஒரு மனிதனின் ஒரு நாளைய வைட்டமின் 'சி' தேவையின் அளவு 75 மில்லி கிராம். ஒரு நெல்லிக்கனியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் 'சி' அளவு 16 வாழைப்பழங்களிலுருந்து கிடைப்பதை விடவும், மூன்று ஆரஞ்சுப் பழங்களிலுருந்து கிடைப்பதை விடவும் அதிகமானது.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.