ஊழல் குற்றச்சாட்டு எதிலும் சிக்காத மோடியை பிரச்சாரக்குழு தலைவராக நியமித்ததன் மூலம் பா.ஜ.க சரியான செயலைசெய்துள்ளது என்று உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; ஐ.மு.கூட்டணி, ஊழலின் அனைத்துவரம்புகளையும் கடந்துவிட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டு எதிலும் சிக்காத மோடியை பிரச்சாரக்குழு தலைவராக நியமித்ததன் மூலம் பா.ஜ.க சரியான செயலையே செய்துள்ளது. மோடியின் நிர்வாகத்திறமை அனைவரும் அறிந்ததே .
இந்தமுடிவினால் 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க .,வுக்கு ஆதாயம்கிடைக்கும். அதேநேரம் கட்சியின்வளர்ச்சிக்கு அத்வானியின் பங்களிப்பை யாரும் மறுக்கவோ, பிரதமர்பதவிக்கான அவரது தகுதிபற்றி கேள்வி எழுப்பவோ முடியாது. இன்றும் கூட தலைமைபதவிக்கு அவர் முற்றிலும் பொருத்தமானவராக உள்ளார் என்றார் .
. உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரான பி.சி.கந்தூரியும் பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை இவர் அதிர்ப்த்தியால் தான் கலந்து கொள்ளவில்லை என்று ஊடகங்கள் புரளிகிலப்பியது குறிப்பிட தக்கது
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
Leave a Reply
You must be logged in to post a comment.