இஷ்ரத் ஜஹானை ‘பீகாரின் மகள்’ என ஐக்கியஜனத தளம் வர்ணித்திருப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2004ஆம் வருடம் மும்பை மாணவி இஷ்ரத்ஜஹான் உட்பட 4 பேரை தீவிரவாத சதித்திட்டம் தொடர்பாக குஜராத் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதாதளம் , இஷ்ரத் ஜஹானை பீகாரின்மகள் என உரிமை கொண்டாடியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான அன்வர் அலி கூறுகையில், “சுட்டுக்கொல்லப்பட்ட இஷ்ரத்தின் தாத்தா வலிமுகமது, பாட்னா அருகே உள்ள ககெளல் என்ற இடத்தைச்சேர்ந்தவர். இஷ்ரத்தின் தந்தை முகமதுஷமிம், பீகாரின் ஜமல் பூரைச் சேர்ந்த ஷமிமாகெளசரை திருமணம் செய்துகொண்டு மகாராஷ்டிராவில் குடியேறிவிட்டனராம். இதனால் தான் இஷ்ரத்ஜஹான் ‘பீகாரின் மகள்’ ஆவார் என புதிய கண்டுபிடிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிர்சாத் ஐக்கிய ஜனதா தளம் வாக்குவங்கி அரசியல் நடத்துகிறது. தீவிரவாதிகள் என சந்தேகிக்கபடுவோருக்கு புகழாரம் சூட்டக்கூடாது. தீவிரவாதிகளுக்கு மதம், சொந்தஊர் என்பதெல்லாம் கிடையாது. பீகாரைச்சேர்ந்த ஒருவர் தீவிரவாதியாக இருக்கக்கூடாதா? கடந்த சில ஆண்டுகளாக பீகாரில் தீவிரவாதிகள் தொடர்ந்தும் கைது செய்ய படுகின்றனரே” என்று கூறியுள்ளார்.
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.