மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA கூட்டணி தோல்வி போன்றவை தவிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
● முன்னாள் முதல்வர் செல்வி. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றிலும் வெற்றி பெறவில்லை.
● திரு. பால் தாக்கரே குடும்பத்தைச் சார்ந்த திரு. ராஜ் தாக்கரே (MNS) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
● வஞ்சித் பகுஜன் அகாடி (வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கான முன்னணி) எனும் திரு. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான கட்சி சுமார் 200 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.
● பகுஜன் விகாஸ் அகாடி ( பொது மக்கள் முன்னேற்ற முன்னணி) – வசாய் பகுதியில் பலமான பிராந்தியக் கட்சி கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தனது மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் இழந்து பின் தங்கியுள்ளது. இதில் அதன் ஆறு முறை MLA வும் அடக்கம்.
பாஜகவுக்கு எதிரான ஒரே அணி என்று இண்டி கூட்டணி ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றாலும் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள், கட்சிகள் அந்த அணியில் இடம் பெறவில்லை என்பதை ஊடகங்கள் குறிப்பிடுவதில்லை.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் அந்த மாநிலக் கட்சி படிப்படியாக அழிந்து விடும் என்று பரப்பப்பட்ட செய்தியைத் தாண்டி இன்று தெலுங்கு தேசம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், லோக் ஜன சக்தி (திரு. ராம் விலாஸ் பஸ்வான்), அப்னா தாள் (திருமதி. அனுப்ரியா படேல்) மற்றும் வட கிழக்கில் சிறிய கட்சிகள் வளர்ந்துள்ளது என்று பார்க்க வேண்டும்.
NDA வை விட்டு விலகிய பஞ்சாபின் அகாலி தளம், காஷ்மீரின் PDP, மகாராஷ்டிராவின் சிவ சேனா (UBT) ஆகியவை சுருங்கி விட்டன. ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, YSR காங்கிரஸ் என்று பல மாநிலக் கட்சிகள் தனித்து இயங்குகின்றன. தமிழகத்தில் அதிமுக, தேமுதிக ஆகியவற்றின் நிலை என்ன என்பது வரும் 2026 தேர்தலில் தெரிந்து விடும்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |