பாஜ மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொலைசெய்யப்படுவது குறித்து விசாரணைநடத்த பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் அமைத்த 3 பேர்கொண்ட உயர்மட்டகுழு இன்று இரவு சேலம்வருகிறது.பாஜ மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ்,
சேலத்தில் கடந்த 19ம் தேதி மர்மநபர்களால் வெட்டிகொல்லப்பட்டார். வேலூரில் இந்துமுன்னணி பொதுச்செயலாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து பாஜக , இந்து அமைப்பு தலைவர்கள் தமிழகத்தில் கொலைசெய்யப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்தகொலைகள், தாக்குதல் பின்னணி குறித்து விசாரித்து கட்சிமேலிடத்துக்கு அறிக்கை அளிக்க பாஜக எம்.பி.,க்கள் பிரகாஷ் சவுடேக்கர், ஆனந்த குமார் ஹெக்டே, செய்திதொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கொண்ட குழுவை தேசியதலைவர் ராஜ்நாத்சிங் அமைத்துள்ளார். இந்தகுழுவினர் இன்று மாலை விமானம் மூலம் கோவைவருகின்றனர். பின்னர் அங்கிருந்து கார்மூலம் இரவில் சேலத்துக்கு வருகின்றனர். ஆடிட்டர் ரமேஷ் படுகொலை குறித்து நாளை விசாரிக்கின்றனர். தொடர்ந்து வேலூர் மற்றும் சென்னைக்கு செல்கின்றனர். பின்னர் அறிக்கைதயாரித்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் ஒப்படைக்கின்றனர்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.