மக்களின் வறுமையை கேலிசெய்யும் விதமாக பேசிவரும் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் தெரிவித்துள்ளார் .
மத்தியப்பிரதேச மாநிலம், தார்மாவட்டம், மானாவாரில் பா.ஜ.க.,வின் ஜனாசீர் வாத் யாத்திரையை புதன் கிழமை தொடங்கிவைத்து பேசிய அவர், பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி, திட்டக்கமிஷன் அதிகாரிகள் வறுமைக்கோட்டில் உள்ள மக்களை கேலியாகப் பேசி வருகிறார்கள். இதை அவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அலாகாபாத்தில் அண்மையில் நடைபெற்றவிவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, ஒருவருக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் கிடைத்து விட்டால் மட்டும் வறுமையை ஒழித்து விட்டதாக அர்த்தமல்ல. ஒருவருக்கு தன்னம்பிக்கையிருந்தால் அவர் வறுமையில் இருந்து மீண்டுவிடலாம் என வறுமையில் பாதிக்கப்படுவோரை மிகவும் மலிவாக விமர்சித்துள்ளார்.
ராகுலின் இந்தவிமர்சனம் கண்டனத்துக் குரியது. வறுமைக் கோட்டிலிருந்து ஒருவர் மீள அவருக்கு உணவு, உடை, இருப்பிடம் முக்கியம். இந்த மூன்றையும் கொடுக்க முடியாவிட்டால் அது குறித்து பேசுவதற்கு காங்கிரஸýக்கு தகுதியில்லை கிராமப்புறங்களில் 27 ரூபாய் வருமானம் ஈட்டுவோர் வறுமைக் கோட்டைத் தாண்டிவிட்டதாக திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது. இதை காங்கிரஸ்தலைவர்களும் ஆமோதித்துள்ளனர். அவர்களின் இந்தக்கணிப்பு கண்டனத்துக்குரியது. 15 ரூபாய்க்கு முழுச் சாப்பாடே சாப்பிடலாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்றார்
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.