100 நாள் வேலைதிட்டம் தொடர்பாக நேருக்குநேர் விவாதிக்க தயாரா

100 நாள் வேலைதிட்டம் தொடர்பாக தம்முடன் நேருக்குநேர் விவாதிக்க தயாரா என மூத்தகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் சவால் விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கான (MGNREGA) நிதி ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு குறைத்து விட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அளித்துள்ள பதில்:

2004-14 ஆண்டு காலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மற்றும் கடந்த 9 ஆண்டுகாலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஆட்சிக் காலத்தின்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சொத்துக்கள் உருவாக்கம் ஆகிய இரண்டு அம்சங்கள் தொடர்பாக, காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல் காந்தியுடன் விவாதிக்கத் தயார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பட்ஜெட் மதிப்பீடு ரூ. 33,000 கோடியைத் தாண்டவில்லை. பெரும்பாலான நிதி ஆண்டுகளில், கிராமப்புற வேலைத் திட்டத்தை மோசமாகச் செயல்படுத்தியதால் அந்தநிதியிலும் குறிப்பிட்டத் தொகை திரும்பி வந்தது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற மே 2014 முதல், ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் மதிப்பீட்டைவிட திருத்தப்பட்ட மதிப்பீடு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டும் ரூ.73,000 கோடி பட்ஜெட் மதிப்பீடு; ஆனால் அதன் செலவு ஏற்கெனவே ரூ.89,400 கோடியைத் தொட்டுள்ளது,

2019-20 நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீடு ரூ.60,000 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.71,000 கோடியாகவும் இருந்தது. 2020-21-ல் ரூ.61,500 கோடி பட்ஜெட் மதிப்பீடு; ஆனால் செலவு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்தது.

கோவிட் தொற்று காரணமாக நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு மக்களின் இடப்பெயர்வு அதிகரித்ததன் காரணமாக அந்த ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான ஆரம்ப ஒதுக்கீட்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு செலவு அதிகரித்தது. இதேபோல், 2021-2022-ம் நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்படு ரூ.73,000 கோடி; ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.99, 117 கோடியைத் தொட்டது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சொத்து உருவாக்கத்தை சரிபார்த்து விவாதிக்க வரவேண்டும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தில் சொத்து உருவாக்கம் வெறும் 17 சதவிகிதம்தான். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில், இத்திட்டத்தில் சொத்து உருவாக்கம் ஏற்கெனவே 60 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. பள்ளங்களைத் தோண்டுவதும் குழிகளை நிரப்புவதும் என இருந்த மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணிகளையும் அதன் நோக்கத்தையும் பிரதமர் நரேந்திரமோடி மாற்றி அமைத்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டச் சட்டத்தின் (MGNREGA) கீழ் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஏழைகளுக்கு எதிராக அரசு ஆதாரை தவறாகப் பயன்படுத்துகிறது என்கிறார் ராகுல்காந்தி. இப்படியான திட்டங்களை செயல்படுத்துவதில் முழு வெளிப்படைத் தன்மையை கொண்டு வர வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்க ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முற ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...