உணவுபாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்புதெரிவித்து புதுதில்லியில் செப்.16, 17-ம் தேதி முற்றுகைபோராட்டம் நடத்தப்படும் என பாஜக விவசாய அணி தேசியப் பொதுச் செயலர் சுகுணா ராகர் ராவ் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற மாநில விவசாய அணி செயற்குழுகூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:
உணவுபாதுகாப்பு மசோதாவை தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்தபயனும் ஏற்படபோவதில்லை. ரூ.1.30 லட்சம்கோடி, உணவுக்கு மானியமாக கொடுக்கிறது. ஆனால், இந்தமானியம் விவசாயிகளுக்கு நேரடியாகசெல்வதில்லை.ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு குவிண்டால் நெல்லை ஆதாரவிலையில் இருந்து ரூ.270 அதிகமாககொடுத்து விவசாயிகளிடமிருந்து அரசே வாங்கிக்கொள்கிறது. விவசாயிகளுக்கும் நேரடியாகவே மானியத்தை வழங்கிவருகிறது. இதற்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம்கோடி செலவாகிறது.
உணவுபாதுகாப்பு மசோதா தொடர்பாக கடந்த 2009-ம் ஆண்டு தேசிய ஆலோசனைக்குழு முன்பு வைக்கப்பட்டது. ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்காமல் கடந்த 4 ஆண்டுகளாக இதை கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது அவசர, அவசரமாக இந்தசட்டத்தை கொண்டு வருகின்றனர். இந்த சட்டத்தை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளே எதிர்க்கின்றன.இதற்குகாரணம் ஏழை மக்கள், விவசாயிகள், அடிதட்டுமக்கள் பாதிக்கப்படுவார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் 90சதவீதம் விவசாயிகள் எந்த வித பிரச்னையும் இன்றி நிம்மதியாக உள்ளனர். ஆனால் இந்தசட்டத்தை கொண்டுவந்தால் 67 சதவீதம் பேர் மட்டுமே பயனடைவார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 2.50 லட்சம் விவசாயிகள் தற்கொலைசெய்துள்ளனர்.
இதுதொடர்பாக சாமிநாதன் குழு ஆய்வு செய்து அதன் பரிந்துரையை கடந்த 2006-ம் ஆண்டு கொடுத்தது. ஆனால் சாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமுல்படுத்தவில்லை. ஹரியானா மாநிலத்தில் குடா என்பவர் தலைமையிலான குழுவும் இயற்கைபேரிடர், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் ஓர்ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.அதையும் அமுல்படுத்தவில்லை. உணவுபாதுகாப்பு மசோதாவிற்கு எதிர்ப்புதெரிவித்து அக்.16, 17-ம் தேதிகளில் புதுதில்லியில் முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளோம். இதில் ஒருலட்சம் விவசாயிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.பாஜக ஆட்சிக்குவந்தால் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தசட்டத்தில் திருத்தம் கொண்டுவருவோம் என்றார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.