திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர்சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் தாசில்தார் படுகாயம் அடைந்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல்மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் 56 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைப்பதற்காக நேற்றுமுன்தினம் மாலை ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலம் வத்தலக் குண்டு பஸ்நிலையத்தை கடந்து பெரியபள்ளிவாசல் பகுதி அருகே சென்றகொண்டிருந்த போது, திடீரென ஒரு மர்மகும்பல் சிலைகளை நோக்கி கல்வீசியது.
இந்த கல்வீச்சில் அந்தவழியாக சென்ற 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மேலும் ஊர்வல பாதுகாப்புபணிகளை மேற்கொள்ள வந்த நிலக்கோட்டை தாசில்தார் சங்கர நாராயணனுக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் அந்தப்பகுதியில் நின்ற பொதுமக்கள் சிதறி ஓடத்தொடங்கினர். அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக போலீசார் தடியடிநடத்தி, கூட்டத்தினரைக் கலைத்தனர். இதையடுத்து கல் வீசியவர்களை கைதுசெய்யக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சிலைகளை எடுத்துச்சென்ற வாகனங்களை வத்தலக்குண்டு – மதுரை சாலையில் உள்ள உசிலம்பட்டி பிரிவு அருகே நிறுத்திவிட்டு, இந்து முன்னணி அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.
சம்ப இடத்திற்குவந்த திண்டுக்கல் சரக டிஎஸ்பி. அறிவுச்செல்வம், பெரியபள்ளிவாசல் அருகே விசாரணை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவரைநோக்கி கல் வீசப்பட்டதால் போலீசார் மீண்டும் தடியடிநடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.
மறியலில் ஈடுபட்ட இந்துமுன்னணி அமைப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மீண்டும் எடுத்துசென்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால், வத்தலக்குண்டு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.