இந்து அமைப்புகளின் வளர்ச்சி பிடிக்காத சிலராலும்,இந்து மக்களின் ஓற்றுமை பிடிக்காத பலராலும், தான் ஒரு மதசார்பின்மைவாதி என கூறிக்கொண்டு இந்துமதத்தை மட்டும் இழிவுபடுத்தும் போலி மதசார்பின்மை வாதிகளாலும், ஒவ்வொரு வருட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போதும் சில கேள்விகள் எழுப்பபடுகிறது. அந்த கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1,முன்னர் விநாயகர் வழிபாட்டு விழா நடந்த மாதிரி வீட்டுக்குள் இப்போது ஏன் நடப்பதில்லை ?
2…விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ?
3…பெரிய பெரிய விநாயகர் ஏன் ?
4…வீட்டிலேயே அப்பம்,வடை,சுண்டல் சாப்பிட்டு கொண்டாட
வேண்டியதுதானே ?
இந்த கேள்விகளுக்கு பக்தி திருமகன் “திரு.சுகி.சிவம் தன்னுடைய நினைப்பதும் நடப்பதும் புத்தகத்தில் தெளிவானதொரு பதிலை கொடுத்திருக்கிறார்”.அதனை இங்கே தருகிறோம்……..
முன்னாள் முதல்வரும் எந்நாளும் தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பவரும்மான கலைஞர் அவர்கள் எந்தாளும் முதல்வரான விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பற்றி, விநாயகர் வழிப்பாடு பற்றி சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.அதில் யோசிக்க வேண்டியவை சில,பதில் கூற வேண்டியவை பல.
என் மீது அவருக்கு தனிப்பட்ட அன்பு உண்டு.அவர் மீது எனக்கு மிக்க மதிப்பு உண்டு என்றாலும் கருத்து மாறுபாடுகள் என்று வரும்போது பரிமாற்றங்கள் அவசியம்.பதிவு செய்கிறேன்.
முன்னர் விநாயகர் வழிபாட்டு விழா நடந்த மாதிரி வீட்டுக்குள் இப்போது ஏன் நடப்பதில்லை?விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் பெரிய பெரிய விநாயகர் ஏன்?கடலில் கரைக்கிறேன் என்ற கலாட்டா ஏன்?வீட்டிலேயே அப்பம்,வடை,சுண்டல் சாப்பிட்டு கொண்டாட வேண்டியதுதானே? என்கிற தொனியில் ஒரு கேள்வியினை தொடுத்துள்ளார்.
மரியாதைக்கு உரிய அய்யா, முன்பெல்லாம் அம்பாஸிட்டரில் போனவர்கள் இப்பொழுது குவாலிஸ்க்கு மாறிவிட்டார்கள்.இந்தி வெறி காங்கிரஸ் என்று காங்கிரஸை இழித்து,பழித்த திராவிட இயக்கங்கள் அதனுடன் மாறி,மாறி கூட்டணி வைத்துகொண்டன.மதவாத ஜனசங்கம் என்று குற்றம் சாட்டப்பட்ட புதிய பி.ஜே.பியுடன் கூட கூட்டணி வைத்துக்கொண்டன.மந்திரிசபையில் பங்கேற்றன.இத்தனையும் முன்பு போல் இப்போது இல்லை.அரசியல் இயக்கங்களின் அணுகுமுறை மாறலாம்,ஆன்மீக இயக்கங்களின் அணுகுமுறை மாறக்கூடாதா அய்யா?
வெறும் மதவிழாவாக இருந்த விநாயகர் விழாவை,இந்திய தேசிய விழாவாக பாலகங்காதார திலகர் மகாராஸ்டிரத்தில் மாற்றி,தெய்வபக்தியை தேசபக்தி விழாவாக மடை மாற்றிப்போட்டார்.அதேப்போல தாறுமாறான விமர்சனங்களில் இருந்தும்,வீரமணி போன்றோரின் தாக்குதலிருந்தும் இந்து மதத்தை காக்க விநாயகர் விழாவை இந்து இயக்கங்கள் பயன்படுத்ததுவகங்கின.மாறுதல் மானுட தர்மம்.திராவிட இயக்கங்கள் மாற்றலாம்,ஆன்மீக இயக்கங்கள் மாற்றக்கூடாதா?
அடுத்த கேள்வி!கும்பிட்ட விநாயகரை வீட்டில் வைக்காமல் இப்படி ஆற்றிலும்,குளத்திலும் எறிவதுதான் பக்தியா? என்று கேட்டு இருக்கிறார்.
அய்யா! விநாயகர் என்பது நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல் வெறும் சாமி பொம்மை அல்ல.இந்த பூமியின் உருவகம்.இந்த பூமியில் மனிதன் உண்டு,பூத ராட்ஸ கூட்டம் உண்டு,தெய்வீகதன்மை கொண்டவர்கள் உண்டு,விலங்குகள் உண்டு,எல்லாம் சேர்ந்ததுதான் பூமி.அதனால்தான் விலங்கு தலை,மனித உடல்,பூத ராட்ஸக் கால்கள்,தெய்வீகதன்மை கொண்டவராக விநாயகர் உருவானார்.நாங்கள் வாழ்வதற்க்கு உதவிய உலகத்தை வணங்குவதே விநாயகர் வழிபாட்டின் தத்துவம்.உலக உருண்டைதான் அவரது உருண்டைவயிறு.
இந்த உலகம் தண்ணீர் துப்பிய துண்டு. அதாவது கடலில் மூழ்கி இருந்த உலகம் கொஞ்சம்,கொஞ்சம்மாக நீர் வடிய,வடிய வெளியே வந்ததுதான் இந்த தரைப்பகுதி.இதுவும் பல்லாண்டுகளுக்கு ஒரு முறை கடலால் உட்கொள்ளப்பட்டு வேறு ஒரு தரைப்பகுதி மேலே வரும்.இந்த உலகம்மானது இந்த கடல் விட்டுவைத்த மிச்சம்.இது கடலில் மறையக்கூடியது.அழியக்கூடியது.இதை உணர்தவே விநாயகரை கடலில் கரைக்கும் பழக்கம் வந்தது.
உலகம் மண்.அதனால்தான் வேறு எந்த வழிபாட்டிலும் இல்லாதபடி களிமண்ணே விநாயகராக வழிபடப்படுகிறது.பூமிதான் சாமி,சாமிதான் பூமி.இது விநாயகர் வழிபாட்டின் நுட்பம்.கடலில் இருந்து வெளிபட்டு நாம் வாழ வழி வகுக்கும் மண்[பூமி]கட்லில் மீண்டும் மறையும் என்பதை உணர்தவே களிமண் கணேசரை கடலில் கரைக்கும் முயற்சி.
கடல் இல்லாத ஊர்களில் குளங்களில்,ஏரிகளில்,குட்டைகளில் கரைப்பது மரபு.அந்த விநாயகர் தலையில், வயிற்றில், நெற்றியில்,காசை வைத்து கரைப்பது ஒரு சமூக சிந்தனை.அதாவது ஏரி குளம் வற்றும் போது இந்த காசுகளை எடுக்க கூடை கூடையாக மண்ணை வெளியில் கொண்டு வந்து கொட்டுவார்கள்.இதனால் ஏரி,குளம் ஆழம்மாகும்.மழை காலத்தில் நீர் பிடிப்பு அதிகம்மாகும்.உழைத்தவனுக்கு காசு கிடைக்கும்.
எனவே வீட்டிலேயே விநாயகரை வீட்டிலேயே வைத்து வழிபடுங்கள் என்ற உங்கள் யோசனையை விட ஏரி,குளம்,ஆறு, இவற்றில் கரைப்பது என்பதே சமய,சமூக உண்மைக்கான ஏற்ப்பாடு.இதனால் கலவரம் வருகிறதே என நீங்கள் கவலை கொள்வீர்கள்.நியாமான கவலை அது எனக்கும் உண்டு.ஆனால் இந்த ஊர்வல விஷயத்தில் இஸ்லாமியர்கள் இந்துக்களோடு தோழமை உணர்வோடு பழகி கலவரம் செய்பவர்களை ஒழிக்க வேண்டும்.ஆனால் கலவரம் வரும் என்பதற்க்காக ஊர்வலமே வேண்டாம் என்று சொல்லலாமா?.சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுக நடத்திய ஊர்வலத்தில் பெரிய கலவரம் நடந்தது.நிச்சயம் வெளியில் இருந்து வந்த சில விஷமிகள்தான் இதற்க்கு காரணம்.அப்போது திமுகவினர் சிந்திய குருதியினை தொலைகாட்சியில் பார்த்து பதறியவர்களில் நானும் ஒருவன்.நீங்கள் ஊர்வலம் விட்டதால்தான் கலவரம் என்று கூறி திமுகவினர் ஊர்வலம் போகக்கூடாது என சொன்னால் நீங்கள் அதை ஏற்கமுடியுமா?முடியாது அல்லவா.அதே மாதிரி இந்து இயக்கங்களும் உங்களது கருத்தை ஏற்கமுடியாதே.சரிதானே.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.