2014 நாடாளுமன்ற தேர்தலுக்கான நரேந்திர மோடி பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது வெற்றிகரமான முடிவு என மாநிலங்களவை எதிர்க் கட்சி தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
சிஎன்எஎன்- ஐபிஎன் தொலைக்காட்சியில், சிறப்புநேர்காணலில் அருண்ஜேட்லி மேலும் கூறியது:
பிரதமர்வேட்பாளர் குறித்து கட்சிக்குள் இருவேறுபட்ட பார்வைகள் இருந்தன. அனைத்து வாய்ப்புகள் குறித்தும் கட்சித்தலைவர்கள் தீவிரமாக பரிசீலித்தனர். இறுதியில் கட்சியினர் அனைவரும் ஏற்கும்வகையிலும், தொலை நோக்குப் பார்வையுடனும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தமுடிவை எடுப்பதற்கு முன் எங்கள் கூட்டணி கட்சியினருடனும் ஆலோசித்தோம். பா.ஜ.க தொண்டர்களின் விருப்பங்களையும் கருத்தில்கொண்டோம். கட்சி ஏகமனதாக ஒருமுடிவை எடுத்து விட்டால், அதில் அனைவருக்கும் பொறுப்புண்டு. நாட்டில் நிலவும் அரசுக்கு எதிரான மன நிலையை வெற்றிக்கான வாய்ப்பாக மாற்ற, மோடி தலைமை அவசியம் என பா.ஜ.க தொண்டர்கள் கருதுகின்றனர். எங்கள்முன்பு, மோடியை தேர்ந்தெடுப்பது, அல்லது அவ்வாறு தேர்ந்தெடுக்காமல் தவிர்த்து விமர்சனங்களை எதிர்கொள்வது என்ற இருவாய்ப்புகள் இருந்தன. இதில் நாங்கள் வெற்றிகரமான முடிவையே எடுத்துள்ளோம்.
அத்வானி எங்கள் தனிப்பெருந்தலைவர்; பக்குவப்பட்ட, மூத்த தலைவர். கட்சியின்முடிவை அவர் கண்டிப்பாக இறுதியில் ஆதரிப்பார்.
மோடி பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதியகட்சிகள் சேரும்வாய்ப்பு இல்லாமல்தான் இருந்தது. தேர்தலுக்குப் பிறகு பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் வந்துசேரும்.
குஜராத் கலவரத்திற்கு அவர்தான் காரணம் என்று நீங்கள் கூறுவீர்களானால், அவரிடம் மன்னிப்புகோருமாறு நீங்கள் கோரக்கூடாது. “நான் தவறிழைத்திருந்தால் என்னைத் தூக்கிலிடுங்கள்’ என மோடி கூறுகிறாரே, இதைவிட மன்னிப்புக்கோருவது பெரிதா? மோடி தனது நடவடிக்கைகளால் பாரபட்சமற்ற தன்மையை நிரூபித்திருக்கிறார். சிறுபான்மையினர் உள்பட அனைவரும் அவரது நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே அவரை மதிப்பிடமுடியும். சிறையிலுள்ள குஜராத்போலீஸ் அதிகாரி வன்ஸாராவின் மோடி மீதான குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கத்தேவையில்லை. சிறைக்குள் இருப்பவரின் விமர்சனங்களை புனிதமான உண்மைகளாக கருத தேவையில்லை.
1984ல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரானகலவரம் மேலிருந்து கீழ்வரை திட்டமிட்டு நடத்தப்பட்டது. அந்தக்கலவரத்தை மூடி மறைக்க காங்கிரஸ் அரசு இன்றும் முயன்றுவருகிறது. மாறாக, கோத்ராவுக்கு பிந்தைய கலவரங்கள் தொடர்பாக இதுவரை 6 முறை விசாரணைகள் நடைபெற்றுள்ளன என்றார்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Leave a Reply
You must be logged in to post a comment.