இளைஞர்களிடம், நரேந்திரமோடிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
ஈரோடு தெற்குமாவட்ட பாஜக சார்பில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பா.ஜ.க வை மதவாதகட்சி என்று கூறுகிறார்கள். ஆனால் ஏன், எதற்கு அப்படி சொன்னார்கள் என்று சொன்னவர்களுக்கும் தெரியாது. கேட்பவர்களுக்கும் தெரியாது. அரசியலில் தேசபக்தியை ஊட்டவேண்டும் என்று கூறிய கட்சிதான் பாஜக. பாஜக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பா.ஜ.க வளரக்கூடாது என்றுகூறிய அரசியல் கட்சிகள் பல, நம்முடன் கூட்டணிவைக்க முயற்சி செய்துவருகின்றன. கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் 30- ம் தேதி பாரதிய ஜனதா மாநில தலைவர்பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அன்று என்னிடம் பல கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தனர். ஆனால் நான் அவர்களிடம் 6 மாதத்திற்கு பின்புகேளுங்கள் என்று கூறினேன்.
கடந்த 2010 ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஜூலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்தவ, முஸ்லிம் மாணவர்களுக்கு இணையாக ஏழை இந்துமாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்று சமநீதி மற்றும் சமநிதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
அக்.18ம் தேதி சென்னைவந்த நரேந்திரமோடி, பாஜக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களை சந்தித்து பேசியதுடன், தான் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதாக கூறினார். வரும் பிப்ரவரி, மார்ச்மாதங்களில் மோடியை தமிழகத்திற்கு அழைப்போம் என்றால் இந்தியாவில் எல்லா மாநிலம் மிஞ்சும் அளவுக்கு நம்மால் நிகழ்ச்சி நடத்தமுடியும்.
ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் தாமரைகொடி பறக்கவேண்டும். பீகார் மாநிலம் பாட்னாவில் ஞாயிற்றுக் கிழமை மோடி பங்கேற்ற மாநாட்டில் குண்டுவெடித்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தாகவும், 5 பேர் உயிரிழந்ததாகவும் கூறிகின்றனர். சரியானதகவல் இல்லை. நரேந்திரமோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தை சிதைப்பது மட்டுமல்ல மோடியை சிதைப்பதுதான் தேச துரோகிகள் எண்ணமாக உள்ளது. இந்தியாவை அழிக்கமோடியை அழித்தால் போதும் என்று தேசவிரோதிகள் எண்ணி வருகின்றனர். வருகிறகாலத்தில் இளைஞர்களை இலவசம் கொடுத்து ஏமாற்ற முடியாது.
1966 ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைதேர்தலில் காங்கிரஸ் கட்சியைதோற்கடிக்க திமுக. கையில் எடுத்த ஆயுதம் தமிழன், தமிழகம், தமிழ். ஆனால் திமுக வெற்றிபெற்று 1967-ம் ஆண்டு ஆட்சியமைத்தபோது அவர்கள் தமிழகத்தை மறந்துவிட்டனர். 47 ஆண்டுக்கு பின்பு அனைத்து கல்லூரிமாணவர்களும் மோடி பிரதமராக வேண்டும் என்று களம் இறங்கியுள்ளனர். பல கல்லூரிகளில் மோடியின் கல்லூரி என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது மோடிக்கு ஆதரவாக மாணவர்கள் களம் இறங்கியுள்ளனர் என்பதையே காட்டுகிறது.
பாஜக உறுப்பினர்கள் முழுநேர ஊழியராக மாறவேண்டும். வரும் டிசம்பர் மாதம் வீடுதோறும் மோடிநிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் பாதயாத்திரையாக சென்று மோடிக்கு ஆதரவுதெரிவித்த மக்களுக்கு நன்றிதெரிவிக்க உள்ளோம் என்றார்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.