வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரிதவிர மற்ற நாள்களில் நள்ளிரவில் கோயில்களை திறக்கக்கூடாது என்று இந்து முன்னணி நிறுவனர் இராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுகிறோம் என்றபெயரில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ஆம்தேதி நள்ளிரவில் அநாகரிக காட்சிகள் அரங்கேற்றப்படுகின்றன.
நள்ளிரவில் குடித்துவிட்டு பைக், கார்ரேஸ் ஆகிவற்றில் ஈடுபடுபவர்கள், புத்தாண்டுவாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் பெண்களின் கையைப்பிடித்து தகாத முறையில் நடந்து கொள்வோர் ஆகியோரை உடனடியாக போலீஸார் கைதுசெய்ய வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி ஆகிய இரண்டுநாள்கள் தவிர மற்றநாள்களில் நள்ளிரவில் ஆலயபூஜைகள் நடைபெறுவது கூடாது. ஆகம விதிகளுக்கும் இந்துசமய நம்பிக்கைகளுக்கும் புறம்பாக வியாபாரநோக்கோடு டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப் படுகின்றன. இதனை எதிர்த்து இந்துமுன்னணி போராடும் என்று இராம. கோபாலன் தெரிவித்துள்ளார்.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.