பாஜக கூட்டணியில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க சேர்வது உறுதி

 பாஜக கூட்டணியில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சேர்வது உறுதியாகிவிட்டது. இந்த கட்சிகளுடன் வரும் 21ம்தேதி முதல் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்' என காந்திய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழருவிமணியன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; பாஜக அணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குவேளாளர் மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வருவது உறுதி. பாஜக அகில இந்திய செயற்குழு கூட்டம் முடிந்ததும் தமிழக பா.ஜ.க முக்கிய தலைவர்களும், முக்கிய தேசிய தலைவர்களும் 20-ம்தேதி தமிழகம் வருகின்றனர்.

கூட்டணி கட்சிகளுடனான அதிகாரப் பூர்வ பேச்சு வார்த்தையை 21-ம்தேதி முதல் தொடங்க உள்ளனர். இம்மாத இறுதிக்குள் தொகுதிப்பங்கீடு இறுதியாகி விடும். தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும், ஏற்கெனவே தங்களுக்கான தொகுதிகள்குறித்து முடிவு செய்து விட்டனர்.

பிப்ரவரி 8-ம்தேதி பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழகம் வருகிறார். அவர் பங்கேற்கும் கூட்டத்தில், கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்று, தேர்தல்பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.

தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதிக்கத்தை மாற்றும்வகையில் இந்த கூட்டணிக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். தி.மு.க தலைவர் கருணாநிதி ஆயிரம்முயற்சிகள் மேற்கொண்டாலும், பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைவதை தடுக்கமுடியாது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.