நரேந்திரமோடி பிரதமரானால்தான் இந்தியா வல்லரசாகும், குஜராத்தில் மிகுந்தவளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறேன் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சாரத்தில அவர் மேலும் பேசியதாவது.
“தமிழக மக்களுக்கு நரேந்திரமோடி நன்மை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை. ஊட்டியில் உள்ள படுகர் இனமக்கள் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கவேண்டும் என்று கோருகிறார்கள். இதுவரை யாருமே அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஊட்டியில் ஏழைமக்கள் மிகுதியாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு அரசு பொறியியல் கல்லூரி கூட இல்லை.
நான் படத்தில் தான் நடிப்பேன். நேரில் நடிக்கத் தெரியாது. இந்தியா வல்லரசாக மோடிதான் பிரதமராக வேண்டும். குஜராத்தில் மிகுந்தவளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.
டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கும் ஜெயலலிதா அரசு, ஏழைகளின் வளர்ச்சிக்கு ஏதேனும் இலக்கை நிர்ணயித்திருக்கிறதா?. ஊட்டியைப் பொருத்தவரை, தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நலனுக்கு தமிழக அரசு ஏதாவது செய்திருக்கிறதா?
மினிபஸ்சில் எங்கு பார்த்தாலும் இரட்டை இலைசின்னம் இருக்கிறது. அதை வெறும் ஓவியம் என்கிறார்கள். இலவசங்களை விலையில்லா பொருள் என்கிறார்கள். எங்கு பார்த்தாலும் மின்வெட்டு, தண்ணீர் பிரச்சினை. ஆனால், குடிநீரை விலைக்கு விற்கிறார்கள். இது தான் ஆட்சியா?
விஜயகாந்த் கோபப்படுகிறார் என்கிறார்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பது பழமொழி. 13 மாதங்களில் வாஜ்பாய் அரசைக்கவிழ்த்த ஜெயலலிதா, இப்போது யாருடைய ஆட்சியைக் கவிழ்க்க வாக்குகேட்டு வருகிறார்கள். நான் 20 எம்எல்ஏ.க்களுடன் பிரதமரைப் பார்த்தேன். எந்தப் பிரச்சினையிலும் பிரதமரைப் பார்க்காத முதல்வர் ஜெயலலிதா, சாதாரண மக்களை எப்படி பார்ப்பார்?
தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் மக்கள் வாக்களித்தால், அவர்கள் ஊழலுக்குத் துணை போகிறார்கள் என்றுதான் அர்த்தம்.
அம்மா உணவகம், அம்மாபார்மஸி, அம்மா குடிநீர்… இப்படி எல்லாவற்றுக்கும் அம்மாபெயர் வைக்கிறார்கள். மக்களைப் பாழ்படுத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு அம்மா மதுக் கடை என்று பெயர் வையுங்களேன்.
நரேந்திரமோடி என்ன குஜராத்தில் கடையைத்திறந்து வைத்திருக்கிறார்களா? நான் ஷூட்டிங்குக்காக குஜராத் சென்றபோது, அகமதாபாத்தில் நேரில்பார்த்தேன். ஒரு மதுக்கடைகூட இல்லை. அது தான் மோடி ஆட்சி. அந்த நல்ல ஆட்சி, இந்தியாமுழுவதும் வேண்டும். அதற்கு மோடி பிரதமராகவேண்டும்.
நம் கூட்டணிக்கு சண்டை சச்சரவுகள் வரக் கூடாது. எல்லாரும் ஒற்றுமையுடன் இந்த தேர்தலில் செயல்பட வேண்டும்” என்றார் விஜயகாந்த்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.