நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து சுத்தமான பாத்திரத்தில் இட்டு கைகளை நன்கு சுத்தப்படுத்தியபின், நன்கு பிசைந்து சற்றியிலிட்டு எடுத்து பனைவெல்லம் அல்லது கற்கண்டு பொடி கலந்து காலை, மாலை ஒரு குவளை வீதம் பருகி வந்தால் கண்டிப்பாகக் குணமாகும்.
அத்தி இலை, ஆவாரைக் கொழுந்து, குப்பைமேனி போன்ற இலைகளின் மூலமும் முறையாகவும் தொடர்ச்சியாகவும், கஷாயமிட்டு சாப்பிடுவதால் பூரண குணமடையலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத் தூளையும் போட்டு வறுத்துபொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு குடித்து வர வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாது.
குடலில் புண்ணுண்டாகி விட்டது என்பதையுணர்ந்து விட்டவுடன், அதிகமான காரம், புளி, எண்ணெயில் வருத்தப் பொருட்கள் போன்றவற்றை அறவே நிறுத்தி விட்டு பால் உணவு, மோர், தயிர், போன்றவற்றில் உணவை உண்பது போன்ற பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டு, சாதாரணமாகக் கிடைக்கும் மருந்துகளை உண்டு வந்தால் கூட வயிற்றுப் புண் விரைவில் ஆறிவிடும்.
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.