தனித்து விடப்பட்ட காங்கிரசால் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை

 மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் லோக்சபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். தனித்து விடப்பட்ட காங்கிரசால் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை எனும் நிலையில் இது நடைமுறையை புரிந்துகொண்டு எடுத்த சரியான முடிவுதான்.

வழக்கமாக, தமிழக அரசியல் அதிமுக மற்றும் திமுக தலைமை வகிக்கும் கூட்டணியையே மையப்படுத்தி இருக்கும். இந்த இரு கூட்டணிகளுடன் ஏதாவது ஒன்றில் அங்கம் வகித்துக்கொண்டு, காங்கிரசும் வெளித்தோற்றத்திற்கு தன்னை பெரியதாக காட்டிக்கொண்டிருந்தது. இன்று இருவரும் காங்கிரசிடமிருந்து விலகி நின்று விட்டனர். அதிமுகவும் ஐ.மு.கூட்டணி மீது மிகவும் நம்பிக்கையற்று உள்ளது. திமுகவும் ஐ.மு.கூட்டணி தன்னை காட்டிக்கொடுத்து விட்டதாக கருதுகிறது. தேர்தல் முடியும் வரை இருகட்சிகளும் தங்களுக்கான வாய்ப்பை திறந்தே வைத்திருக்கும்.

2004 மற்றும் 2009 தேர்தல்களில், தமிழகமும் ஆந்திரமும்தான் ஐ.மு.கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க வெற்றிகளை அள்ளித்தந்தது. இந்த இரு மாநிலங்கள்தான் தராசின் முள்ளை ஐ.மு.கூட்டணியின் பக்கம் சாய்த்தது. ஆனால் இந்தமுறை இந்த மாநிலங்கள்தான் ஐ.மு.கூட்டணிக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தப்போகிறது.

தமிழகத்தில் பாஜகவின் பலம் விளிம்பில்தான் இருந்தது. ஆனாலும் தன் ஆதரவு தளத்தை பெருக்கிகொள்வதில் இந்தமுறை வெற்றிபெற்றுள்ளது. 'மோதி அலை'யும் இதற்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் பாஜகவின் வாக்கு சதவீதம் இம்முறை இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிமுக, பாமக, மதிமுக, ஐஜேகே (இந்திய ஜனநாயக கட்சி), கொங்குநாடு மக்கள் தேசிய கழகம் ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணியை உருவாக்கியுள்ளது.

தே.ஜ.கூட்டணியால் இருதரப்பு போட்டி முத்தரப்பு போட்டியாக உருமாறியுள்ளது. அணியிலுள்ள கட்சிகளின் வாக்குகள் ஒருங்கிணையும் பலம் மட்டுமல்லாமல், 'மோதிஜி தலைமையிலான கூட்டணி' என்பதும் கூடுதல் பலமாகும். இந்த கூட்டணி குறிப்பிடத்தக்க அளவு இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது. முத்தரப்பு மோதல் என்பது தமிழ்நாடு இதுவரை சோதித்துப்பார்க்காத யுத்தம்.

1996ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் வெறும் மூன்று கட்சிகளே அங்கம் வகித்தன. 2 ஆண்டுகளுக்கும் குறைந்த காலத்தில் அடல்ஜி அதை 24 கட்சிகள் கொண்ட கூட்டணியாக மாற்றினார். இப்போதும் தே.ஜ.கூட்டணி அந்த திசையில்தான் செல்கிறதோ? தமிழ்நாட்டிற்கு பிறகு சீமாந்திராவிலும் தெலங்கானாவிலும் நடக்கும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அப்படியே நடந்துவிட்டால் பாஜக, கூட்டணி  எதுவும் அமைக்காமல் விடுவது, கேரளா, ஒடிஷா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் மட்டும்தான். வடவங்காளத்தில் GJMM ஆதரவுடன் சில இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. ஒடிஷாவிலும் கேரளத்திலும் கட்சிக்கு வாக்கு பலம் கூடியுள்ளது. இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி குணநலனை தேஜகூட்டணிதான் இன்று பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...