நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித்தலைமை எந்ததொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்குசதவிகிதம் அதிகம் உள்ள 5 தொகுதிகளை அக்கட்சி மேலிடம் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில், ஒருதொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை களம்இறக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்குறுதி தயாரிப்புகுறித்து கருத்து கேட்புக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளீர்களா என்றகேள்வி எழுப்பப்பட்டது. அதற்குபதிலளித்த அவர், கட்சித் தலைமை தன்னை எந்தஇடத்தில், எந்ததொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன் என்றார். அதேவேளையில், பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன். ஆனால் தன்னை பொறுத்தவரை சொந்தவிருப்பம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.
மேலும், இன்னும் 60 நாட்களுக்கு தன்னை எப்படி பயன் படுத்த வேண்டும் என்பது கட்சியின் தலைமைக்கு தெரியும். அந்த அடிப்படையில்தான் செயல்படுவேன். மத்திய அமைச்சர்களை போட்டியிட வைத்து ஜெயிக்க வைக்க தயாரா என்று அதிமுகவின் கே.பி.முனுசாமி விடுத்த சவால் குறித்தும் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கும் பதில் அளித்த அண்ணாமலை, ஏன் மத்திய அமைச்சர்களை போட்டியிட வைக்கவேண்டும். சாதாரண கிளை நிர்வாகியை கூட கட்சி போட்டியிட வைக்கும். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒருதோல்வியடைந்த நடிகர் என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார். அவரது தந்தை பேரையும், தாத்தா பெயரையும் எடுத்துவிட்டால் உதயநிதிக்கு எந்த முகவரியும் இல்லை என்று விமர்சித்தார்.
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |