இந்தியாவைக் காப்பாற்ற மோடியால்மட்டுமே முடியும்

 இந்தியாவைக் காப்பாற்ற மோடியால்மட்டுமே முடியும்.பாஜக 280 இடங்களில் வெற்றிபெறும்., மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று பாஜக ஆட்சி அமைத்தால் கூட்டணிக் கட்சிகளுக்கு உரியகௌரவம் கிடைக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் தே.ஜ.கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புதன் கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது தமிழகத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் சார்ந்தே மற்றகட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது இந்த இரண்டுகட்சிகள் இல்லாத மிகப்பெரிய கூட்டணியை நாம் தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளோம். கூட்டணியை உருவாக்க எந்த அளவுக்கு சிரமம், இடையூறுகளைச் சந்தித்தோம் என்பதையும், கூட்டணியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களையும் பற்றி நான் முழுமையாக தெரிந்துகொண்டேன்.

பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும் என வைகோ, விஜய காந்த், ராமதாஸ், பாரிவேந்தர் உள்ளிட்டோர் நினைத்தனர். அதன் பயனாக இந்தக் கூட்டணி அமைந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நாடு எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

குஜராத் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் சென்றுள்ளார் மோடி. மின்பற்றாக்குறையை சமாளிக்க சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு மின் திட்டங்களை அவர் மேற்கொண்டார். இப்போது 16 மாநிலங்களுக்கு குஜராத்மாநிலம் மின்சாரம் வழங்கிவருகிறது.

தடுப்பணைகளைக் கட்டி நிலத்தடி நீரை சேமித்து தண்ணீர் வளத்தை மோடி அங்கு ஏற்படுத்தியுள்ளார்.குழந்தைகளுக்காகவே அங்கு ஒரு பல்கலைக் கழகத்தை அவர் உருவாக்கி உள்ளார். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியதோடு, பட்டம்பெற்று இருந்தாலும் ஆங்கிலத்தில் பேசும் திறமையையும் அவர் உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரதமரானால் அனைத்துமாநில முதல்வரின் கருத்துகளை அறிந்து மத்திய அரசு செயல்படும் என்று மோடி கூறியுள்ளார். அந்த ஆட்சியைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மோடிக்கு அதிக ஆதரவு தருபவர்கள் இளைஞர்கள். மோடிபிரதமராக வந்தால்தான் தங்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். வருங்கால தலைமுறைக்கும் அது நல்லது. இந்தியாவைக் காப்பாற்ற மோடியால்மட்டுமே முடியும்.பாஜக 280 இடங்களில் வெற்றிபெறும். அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கும் உரிய கௌரவம் கிடைக்கும்.தமிழ்ச் சமுதாயத்துக்கு துரோகம்செய்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம்புகட்ட வேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...