பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வில்லை என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாக்ஷி லேகி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நரேந்திரமோடி, மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை கைதுசெய்ய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே வெளிப்படையாக தெரிவித்த கருத்தை கண்டித்தார்.
ஒசாமா பின் லேடன் விவகாரத்தில் அமெரிக்க அரசு அப்படி நடந்துகொண்டதா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். மோடியின் இந்தபேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், மோடியின் பேச்சு, தங்கள் நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்றும், இந்தியாவின் வெளியுறவுகொள்கை தோல்வி அடைந்து விட்டதையே இது காட்டுவதாகவும் குற்றஞ் சாட்டியிருந்தது.
இதற்கு பதில் தந்துள்ள மீனாக்ஷி லேகி, தங்கள் நாட்டு உள் துறை அமைச்சரை விமர்சிப்பது, எப்படி பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடுவதாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.