பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கைவழியாக தமிழகத்திற்குள் ஊடுருவுகின்றனர். இலங்கையில் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படும் ஆயுதப்பயிற்சியை தடுக்கவேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் என்று பாஜக தேசிய செயற் குழு உறுப்பினர் இல. கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது;
நாட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்பினர் இலங்கையில் ஆயுதப்பயிற்சி பெற்று அங்கிருந்து தமிழ்நாடு வழியாக ஊடுருவி வருகின்றனர். கடல் வழியாக தமிழ் நாட்டுக்குள் நுழைவது சுலபம் என்பதால் இந்தவழியை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இலங்கை அரசுக்குத்தெரிந்தே இது நடக்கிறது. 3 மாதங்களுக்கு முன்பே இதை நான் குறிப்பிட்டேன். கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஜாகிர் உசேன் கைது செய்யப் பட்டிருப்பது எனது குற்றச்சாட்டை உண்மையென நிரூபிக்கும்வகையில் உள்ளது.
இலங்கையில் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்படும் ஆயுதப்பயிற்சியை தடுக்கவேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும். இனி வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெறக்கூடாது. மத்தியில் மோடி பிரதமரான பிறகு, எந்தமதம் சார்ந்தவர்களாக இருந்தாலும் தீவிரவாதிகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்.
சென்னையில் நடைபெற்ற வெடி குண்டு தாக்குதல், மோடி பிரசாரம்செய்யும் பகுதியில் மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டிருப்பதாகவே கருதுகிறோம். இந்தவழக்கை தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாநில அரசு ஒப்படைக்கவேண்டும்.
இந்த மக்களவை தேர்தல் மன்மோகன் சிங்கை அகற்றி விட்டு மோடியை அமர வைக்கவேண்டும் என்பதற்காக நடந்த தேர்தலாக கொள்ள வேண்டியதில்லை. காங்கிரஸ் அரசு கடைப்பிடித்த செயல் முறை, கண்ணோட்டம் ஆகியவற்றுக்கான மாற்றம்தேவை என்பதற்காக தீவிரமாக உழைத்திருக்கிறோம். இதற்காகத்தான் பொறுமையுடன் இடங்களைப் பங்கிட்டுக்கொண்டு நல்ல அணியையும் உருவாக்கியிருக்கிறோம்.
பா.ஜ.க.,வுக்கான வாய்ப்பான தொகுதிகளை கூட இழந்திருக்கிறோம். ஆனாலும், கட்சி முடிவுக்கு கட்டுப்பட்டு பாஜகவினர் தேர்தல் பணியாற்றியிருக்கிறார்கள். இந்த அணி தொடரும்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தாலும், பணப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தடுக்கமுடியவில்லை. தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அதே ஆளும் கட்சியினரிடம் தான் பணியாற்ற வேண்டுமே என்ற அச்சத்தில் பணியாற்றியதாக அதிகாரிகள் பலரும்தெரிவித்தனர். இந்த நடைமுறை சிக்கல்களைப் போக்கும் வழிகளை ஆராய்ந்து இன்னும் சிறப்பாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்கவேண்டும் என்றார் இல.கணேசன்.
பேட்டியின்போது, அக்கட்சியின் மாநிலச் செயலர் சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் பார்த்திபன், கோட்டப் பொறுப்பாளர் இல.கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.