திருக்கோயில் குளம்சார்ந்த நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதை தடுத்து, கோயில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்படவேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் வலியுறுத்தியுள்ளார்
திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் இந்து முன்னணி சார்பில் சாதித்தலைவர்கள் அல்ல, சாதித்த தலைவர்கள் என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாயத் தலைவர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், அவர் பேசியது: இந்துமதம் பல்வேறு பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்துவருகிறது. அவற்றிலிருந்து இந்துமதத்தை மீட்டெடுத்து வளர்த்தெடுக்க வேண்டிய கடமை அனைத்து சமுதாயத் தலைவர்களுக்கும் உண்டு. உயர்ந்தசாதி, தாழ்ந்தசாதி என்ற வேறுபாடு காரணமாக பிரிந்து செயல்படாமல் நாம் அனைவரும் இந்துமதத்தவர் என்ற அடிப்படையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
மத மாற்றத்தை அங்கீகரிக்க கூடாது. மதமாற்றங்கள் அதிகரித்தால் இந்துக்கள் சிறுபான்மை இனத்தவராகும் நிலை உருவாகும். நாட்டின் சுதந்திரம், இந்துக்களின் தன்னாட்சிக்கு ஆபத்து ஏற்படும். வருங்கால தலை முறையினருக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பசு, கன்றுகளை கேரளத்துக்கு இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும். பசுக்களின் இறைச்சியை ஏற்றுமதி செய்வதையும் தடைசெய்ய வேண்டும். பெரும்பாலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளன. திருக்கோயில் குளம்சார்ந்த இடங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றன. எனவே, கோயில் நிலங்கள் மற்றும் அதன் குளம்சார்ந்த இடங்களை கண்டறிந்து அவற்றை மீட்டெடுக்கவேண்டும். அனைத்து கோயில்களிலும் 6 கால பூஜையுடன், அன்னதானத் திட்டத்தையும் உறுதி செய்யவேண்டும். ஆண்டுக்கொரு முறை சமர்ப்பண தினம் கொண்டாடப்படுவதன் மூலம் என் நாடு, என்மதம், என் தாய் என்ற விழிப்புணர்வை அனைத்து சமுதாயத்தினரிடமும் கொண்டுசேர்க்க வேண்டும். கோயில்களே நீதிமன்றங்களாகவும், மருத்துவ சாலைகளாகவும் மாறவேண்டும் என்றார் அவர்.
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.