கடந்த கால தவறுகள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார்
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து மக்களவை அதிமுக கட்சித் தலைவர் தம்பி துரை எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலின்போது ரவிசங்கர் பிரசாத் இவ்வாறு கூறினார்.
மக்களவையில் தம்பிதுரை பேசும்போது, “சட்டவிரோதமாக 360 தொலை பேசி இணைப்புகள் பெற்றதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரித்துவரும் வழக்கின் நிலை என்ன? என்றார்.
அதற்கு பதிலளித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறும் போது, “இதுதொடர்பான விவரங்களை விரைவில் சேகரித்து அவையில் அளிக்கிறேன். அலுவலக அதிகாரிகள் நிலையில் நடத்தப்பட்ட கருத்துப் பரிமாற்ற ங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து பின்னர் அவையில் தெரிவிக்கிறேன்” என்றார்.
அதன்பின்பு, “இந்தவழக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளில் முடியும்” என்று தம்பிதுரை மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு, “கடந்த காலங்களில் நடந்த தவறுகள் அனைத்தையும் விசாரிப்பதில் எங்கள் அரசு முனைப்பு காட்டும்.இந்தவழக்கு தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், குற்றவாளிகள் யாரையும் அரசு தப்பவிடாது” என்றார் ரவிசங்கர் பிரசாத்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.