வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் மோடி ஜெய்சங்கர் ஆலோசனை

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். வங்கதேசத்தில் உள்ள, ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், ‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி.

கடந்த மாதம் 30ம் தேதி ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாைஸ சமீபத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிட்டங்காங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை போலீசார் அழைத்து வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, போராட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்கான் மற்றும் ராமகிருஷ்ண இயக்கம் ஆகியவை மத்திய அரசை வலியுறுத்தியது.

பார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடரிலும் இந்த பிரச்னை எதிரொலித்தது. காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய போது, ‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அந்நாட்டு அரசுக்கு, மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தாக்குதல்கள் மனிதகுலத்துக்கு எதிரான செயல். இந்த விவகாரத்தில் ஐ.நா., சபையின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது,” என மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்தார்.இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடியை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமரிடன் அவர் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதி ...

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி 'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வே ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும் – அண்ணாமலை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நி ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...