பிரிக்ஸ் வளர்ச்சிவங்கி அமைவதன் மூலம், தென்அமெரிக்க நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சியில் இருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்கள் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விவசாயம்,தோட்டக் கலை, பேரிடர்மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்தியா வல்லுநர்களை அனுப்பி வைத்துள்ளது.
புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறையில் தென்அமெரிக்க நாடுகளுடன் இந்தியா இணைந்துசெயலாற்றி வருகிறது . தொலைபேசிவழி மருத்துவம் தொலைபேசி வழிக் கல்வி, மின்னணு நிர்வாகமுறை ஆகியவற்றில் தென் அமெரிக்க நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா முன் வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சிறப்பறிவு திறனை பகிர்ந்துகொள்ள, தென் அமெரிக்க நாடுகளில் தகவல்தொழில்நுட்ப மையங்களை இந்தியா அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.