பத்மாசனம்
தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் சிறந்த ஆசனமாகும். வலது காலை மடித்து இடது தொடைச் சந்திலும் வையுங்கள். இரண்டு முழங்கால்களும் தரையைத் தொட வேண்டும். நிமிர்ந்து இருங்கள். பார்வை புருவ மத்தியில் நிற்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
புத்தர் எப்போதும் பத்மாசனத்தில்தான் இருப்பார். தாமரை மலரைப் போன்ற ஆசனம் இது. தாமரை ஏழு இதழ்களைக் கொண்டது. ஏழு, தெய்வீக எண் என்பதால் தாமரையைத் தெய்வீக மலராகப் போற்றுகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஆசனத்துக்கு குறைந்த சக்தியே போதும்.
பத்மாசனத்தில் நிமிர்ந்து உட்காரும்போது நமது உடலைப் பூமியோடு ஒரே சீராகப் பரப்பி வைக்கிறோம், அப்பொழுது புவி ஈர்ப்பு சக்திக்கு வேலை கிடையாது.
நம் கைகளும் கால்களும் ஒரே தொடர்பில் இருப்பதால் நம் உயிர்சக்தி வெளியே போகாமல் உள்ளேயே வளம் வருகிறது. இதனால் வியாதியை, பிரச்சனையை எதிர்க்கும் சக்தி அதிகரிக்கிறது. உரை நிகழ்த்துபவர்கள் பத்மாசனத்தில் இருந்து நிகழ்த்தினால், அறிந்த தகவல்களை எளிதில் உதாரணமாகக் கூறலாம்.
பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வதும், மூச்சுப் பயிற்சி செய்வதும் சிறந்தது. பத்மாசனத்தில் ஒரு வட்டத்திற்குள் உட்கார்ந்திருக்கிறோம். எனவே, சக்தி வட்டம் வட்டத்திற்குள்ளேயே சுற்றி வருகிறது. செயல்படுகிறது. இதனால் சக்தி வெளியே செல்வதில்லை. அதனால், தியானம் செய்பவர்கள் சக்தியை எளிதில் புதிப்பித்துக் கொண்டு விடுகிறார்கள்.
நன்றி : பானுகுமார்
You must be logged in to post a comment.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
hu