விதுரர் பாகம் 1

 மகாபாரதம் என்னும் இதிகாசம் முழுதும் பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளையும் அதர்மங்களையும் கொண்டதாக இருப்பினும் அதில் மறக்க இயலாத கதாபாத்திரங்கள் பலதையும் தன்னகத்தே கொண்டுள்ளது!! அதிலே ஒரு பாத்திரம்தான் மகாபாரதத்தில் 'மகாத்மா' என்ற பெயர் பெற்ற விதுரர்!!


விதுரனின் கதை நமக்கெல்லாம் ஒரு பாடம்!! ஒரு கோணத்தில் மட்டுமல்ல பல கோணங்களில்!! 'தர்மம்' காப்பதில், தர்மத்தை எடுத்துரைப்பதில் எந்த விதமான சிக்கலான சூழலிலும் கூடத் தன்னிலை மாறாமல் இருந்த ஒரே தர்மவான் விதுரன் மட்டுமே!! அது மட்டுமல்ல பிறப்பினால் உண்டாவதல்ல சிறப்பு என்னும் மொழியை நிரூபிக்கும் மாமனிதனாக விதுரர் நிற்கிறார்!!

விதுரரின் பிறப்பு பற்றி யோசித்துப் பார்த்தால் பெரும் வியப்புண்டாகிறது!! அவர் தர்மதேவதையின் அம்சமாகவே சொல்லப் படுகிறார்!! நான் முந்தைய அம்பையின் கதையில் சொன்ன விசித்திரவீரியன் அம்பிகை மற்றும் அம்பாலிகை இரு சகோதரிகளை மணந்த கதையை அறிவீர்கள்!! அதன் பின்னர் நடந்த நிகழ்வில் விதுரரின் பிறப்பு வருகிறது!!!

பெயருக்கேற்ப விசித்திரவீரியன் ஏதோ ஒரு விசித்திரமான வீரியக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டு அவனுக்கு வாரிசின்றிப் போனது! அது குறித்து அரச வம்சம் விளங்க வேண்டுமே என்னும் கவலை கொண்ட பீஷ்மர் ஒரு முடிவு செய்தார்!! அதுவே வியாசமுனிவர் மூலம் அம்பிகையும் அம்பாலிகையும் 'கர்ப்ப தானம்' பெறுவது!!

இது சற்று இன்றைய சூழலில் சிந்தித்துப் பார்த்தால் கொஞ்சம் ஆபாசமாகத் தோன்றலாம்!! ஆனால் அன்றைய மக்கள் காமத்தை வாரிசு உருவாக்கும் ஒரு விஷயமாகவே மட்டும் எடுத்துக் கொண்டு அதில் அதிக ஈடுபாடு கொள்ளாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!! இந்நிலையில் மன்னனுக்கு வாரிசின்றிப் போகாமல் இருக்க ஓர் நல்ல ஞானி, ரிஷி,முனிவர் மூலம் கர்ப்பதானம் பெறுவதென்பது அன்று நடைமுறையில் இருந்த விஷயமே!! இது மரபியல் ரீதியில் நல்லதொரு வாரிசு உருவாக்கும் முறையாகவே சொல்லப் பட்டது!! அதே போல கர்ப்பதானம் தரும் ஞானியும் கூட அதில் பெரிய ஈடுபாடின்றி ஒரு சேவை போலவே செய்து வந்தனர்!!

இந்நிலையில் கர்ப்பதானம் தர முன்வந்த வியாச ரிஷியின் மூலம் என்ன நிகழ்ந்தது என்பதையும் அதில் எவ்விதமாக விதுரர் பிறந்தார் என்பதையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்!!

நன்றி ;#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

தொடரும் …..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...