பட்டியலின மக்களுக்கான 3000 கோடியை மடைமாற்றிய திமுக

அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் பாதயாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில் நிலையம் அருகே பாதயாத்திரையைத் தொடங்கியவர், தேவர் சிலைபகுதி வரையிலும் கட்சித்தொண்டர்களுடன் பாதயாத்திரையாக வந்தார். கடம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க மண்பாண்டங்களுக்கு மானாமதுரை புகழ்பெற்றது. இங்குள்ள மண்பாண்டத்தின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார் அண்ணாமலை. உடனே, கட்சிநிர்வாகிகள் மண்பாண்டம் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்றனர். கடம் தயார் செய்யும் இடத்தைப் பார்வை யிட்டவர், மண்பாண்டம் தயாரிக்கும் சக்கரத்தை இயக்கினார்.

தொடர்ந்து, வரும்காலங்களில் இந்தத்தொழில் நலிவடையாமல் இருக்க தன்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பதாகக் கூறினார். அண்ணாமலை பேசும்போது, “மானாமதுரை கடம் உலக புகழ் பெற்றதாக விளங்குகிறது. தமிழர்கள் உலகின் மிகப் பழைமை யானவர்கள் என்பதை கீழடி நமக்கு உணர்த்தி யிருக்கிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட மண்பானைகள் மானா மதுரையில் செய்யப் பட்டவை என்று சொல்லப் படும் அளவுக்கு வரலாற்றுப் புகழ்வாய்ந்தது இந்த ஊர். ஆனால், இந்தஊர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மத்திய அரசு பட்டியலின மக்களுக்காக ரூ.3,000 கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கியது. அந்தநிதியைத்தான் தற்போது தி.மு.க மகளிர் உரிமைத் தொகைக்காக எடுத்திருக்கின்றனர். யார்பெற்ற குழந்தைக்கு யார் பெயர் வைப்பது, இந்த நிதி மாற்றத்தை அரசாணையாக வெளியிட்டிருக்கின்றனர்.

பொருளாதரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா இன்று மோடி ஆட்சியில் 5-வது இடத்துக்கு முன்னேறி யிருக்கிறது. தமிழ் மொழியை, அதன் தொன்மையை உலகமெங்கும் எடுத்துக்கூறி தமிழுக்குப் பெருமை சேர்ப்பவர் மோடி. காரைக்குடி செட்டி நாடு பகுதியினருக்குச் சொந்தமாக மடம் போன்ற ஓர்இடம் இருந்தது. அந்த இடத்தை அப்போதைய ஆளும் அரசு அபகரித்தது. ஆனால், பா.ஜ.க அரசு தற்போது அதை மீட்டுக் கொடுத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்துக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...