‘வரும் காலங்களில், அமெரிக்காவை விட சிறந்த சாலை கட்டமைப்பை உருவாக்குவோம்,’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், சாலை மற்றும் பாலம் கட்டுதல் குறித்து இரண்டு நாள் கருத்தரங்க துவக்க விழா நடந்தது. கருத்தரங்கம் துவக்க விழாவில், நிதின் கட்கரி பேசியதாவது:
வரும் காலத்தில், அமெரிக்காவை விட சிறந்த சாலைகள், கடல் மார்க்க போக்குவரத்து மற்றும் ரயில்வே போக்குவரத்தை, குறைந்த செலவில் கட்டமைத்து விடுவோம்.
குறைந்த செலவில் அனைத்து போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தினால், அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிப்பதாக அமையும். அத்தகைய திட்டங்களை வகுக்க, சிறந்த நிபுணர்களை கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப்.கென்னடி, ‘அமெரிக்கா பணக்கார நாடாக இருப்பதால் அமெரிக்க சாலைகள் நன்றாக இல்லை. அமெரிக்க சாலைகள் நன்றாக இருப்பதால் அமெரிக்கா பணக்கார நாடாக உள்ளது’ என்று கூறியது என் நினைவுக்கு வருகிறது. அதன்படி, வரும் காலத்தில், இந்திய சாலைகள் கட்டமைப்பு, அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும். அதை நாங்கள் செய்து காட்டுவோம்.
இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |