அரியானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக. தீவிரமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
பா.ஜ.க.வின் புதிய தேசியத்தலைவராக அமித்ஷா தேர்ந்து எடுக்கப்பட்டார். அவர் அரியானா தேர்தலில் தனிகவனம் செலுத்தி வருகிறார் .
உத்தரபிரேசததில் வெற்றியை குவித்ததுபோல அரியானாவிலும் வெற்றிபெற அவர் புதிய வியூகங்கள் வகுத்துள்ளார். அதன்படி அரியானாவில் அவர் ”விஜய்சங்கல்ப் யாத்திரை” நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
11 நாட்கள் நடக்கும் இந்த பிரசாரயாத்திரையை வியாழக்கிழமை அமித்ஷா தொடங்கி வைத்தார் . இதன் மூலம் அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தை பா.ஜ.க. தொடங்கி விட்டது.
அரியானாவில் உள்ள மகேந்திர கர்க் என்ற இடத்தில் தனது பிரச்சாரத்தை துவக்கிய அமித் ஷா அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் ஹுடா முதல்வராக பதவி வகித்து வரும் இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. இம்மாநிலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நில பேர ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டெல்லியில் உள்ள காங்கிரஸ் பேர்வழிகள், விவசாய நிலங்களை எல்லாம் அபகரித்து விற்பவராக ஹுடாவை மாற்றி விட்டனர்.
இவ்வாறு பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்
விஜய் சங்கல்ப் யாத்திரைக்கு அரியானா மாநில பா.ஜ.க. தலைவர் ராம்விலாஸ் சர்மா தலைமை ஏற்று நடத்துகிறார். இந்த யாத்திரை நிவாரி, குர்கான், மேவட், பரிதாபாத், பல்வால் உள்பட பலமுக்கிய நகரங்கள் வழியாக நடைபெற உள்ளது.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.