ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு

முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் வக்ப் சட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அங்கு சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.,வின் மூத்த தலைவருமான அமித்ஷா அம்மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

முர்ஷிதாபாத்தில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்துவதற்காக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்ப் சட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்த்து வருகிறார். இதன் மூலம் இந்நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவர் அவமதித்து உள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்த மம்தாவுக்கும், அவரின் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்.

வக்ப் சட்டத்திற்கு எதிராக முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரம் மாநில அரசின் ஆதரவுடன் நடந்தது. அப்போது சிஆர்பிஎப் வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சகம் முயற்சித்தது. ஆனால், அதற்கு மம்தா ஆதரவு தரவில்லை. இதனால், கலவரம் தொடர்ந்தது. திருப்திபடுத்தும் அரசியலுக்காக வக்ப் சட்டத்திற்கு மம்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

வங்கதேசத்தவர்கள் எளிதாக ஊடுருவ வேண்டும் என்பதற்காக மேற்கு வங்க மாநில எல்லையை முதல்வர் மம்தா திறந்துவிட்டு உள்ளார். அவரால் ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்த முடியாது. பா.ஜ., வால் மட்டுமே முடியும்.

எல்லை பாதுகாப்பு படையினருக்கு தேவையான நிலத்தை மம்தா தலைமையிலான அரசு ஒதுக்கவில்லை. அந்த நிலத்தை ஒதுக்கிய பிறகு, ஊடுருவல் தடுத்து நிறுத்தப்படும். அப்படிநடக்கக்கூடாது என்பதற்காக தான் நிலத்தை தர மாநில அரசு மறுக்கிறது.இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...