பிஹாரில் மெகா கூட்டணி (காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதள், ஐக்கிய ஜனதாதள் ஆகியவற்றின் சந்தர்ப்பவாத கூட்டணி) சட்டசபை இடைத்தேர்தலில் பாஜகவை விட அதிக ஆதாயம் பெற்றதைப்போல் தெரிகிறது. சமீபத்திய மக்களவைத்தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக
கூட்டணி 40க்கு 31 இடங்களை பெற்று பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் பெருவெற்றிதான் இம்மூன்று கட்சிகளின் தகாத கூட்டணி உருவானதன் காரணம். "மோதி மாயம் மங்குகிறது" என்று ஒரு செய்தித்தாளின் தலைப்புச்செய்தி அலறுகிறது.
முதலாவதாக, இது வெறும் எண்ணிக்கை கணக்கு தான். வரவேற்கப்பட வேண்டிய அறிகுறி என்னவென்றால், இந்த பின்தங்கிய, ஜாதீய ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தை, பாரம்பரியமாக தங்கள் கிடுக்கிப்பிடியில் வைத்துக்கொண்டு, இருபதாண்டுகளாக ஒருவரையொருவர் தாக்கி வசைபாடிக் கொண்டிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக ஒன்றுசேரும் நிலைக்கு தள்ளப்பட்டது தான். ஆனால் இது தான் 'அரசியல்', அவர்கள் சொல்வதைப் போல 'சாத்தியங்களின் கலை'. குறிப்பாக, ஊழல் மற்றும் மதவாத கூட்டாளிகளின் வாழ்வாசை சாத்தியங்களை உள்ளடக்கியது தான் இந்தக் 'கலை'.
இரண்டாவது, இதை, ஆடைகளை மாற்றி மாற்றி பார்க்கும் ஒத்திகையாகத்தான் கொள்ளவேண்டும். இத்தகைய அழுகுனி கூட்டாளிகளின் ஆட்டம் பலிக்காது என்று நிரூபிக்க, பாஜகவுக்கு கிடைத்த ஒரு நல்வாய்ப்பாக இருந்தது.. துரதிர்ஷ்டவசமாக தற்போது இக்கூட்டணி உறவுகள் ஜெயிப்பது போல் தெரிகிறது. மேலும், ஜாதி மத அரசியல்தான் தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு ஆதாயமளிக்கும் என்று இன்னமும் நம்புபவர்களுக்கு கிடைத்த வெற்றிக்கனி. கடந்த மக்களவை தேர்தலில் இருந்து, பாஜக, நிச்சயமாக தன் மதிப்புமிக்க தளத்தை, மனோரீதியாக அதிகமாகவே இழந்திருக்கிறது.
சமூக – கலாச்சார பரிமானங்கள், நாட்டின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு விதமானவை. உபி மற்றும் பிஹார் மாநிலங்கள், பல தலைமுறைகளாக பின்தங்கியவை. அம்மக்கள் சிக்கிக்கொண்டிருக்கும் அரசியல், சமூக தாக்கத்திலிருந்து அவர்களை வெளியேற்றி, அவர்கள் மனதை வென்று வசப்படுத்த வித்தியாசமான சிந்தனை அவசியம்.
ஆம். பொதுத்தேர்தல் மிக உயர்ந்த நேர்மறை முடிவுகளை வெளிப்படுத்தியது. ஆனால் அம்முடிவுகள், மத்தியில் நாட்டின் பிரதமராக நரேந்திர மோதி வரவிரும்பி அளிக்கப்பட்டவை. தர்மசங்கடப்படும் வகையில், எளிதில் வளைகிற, வேறுவழியற்ற மன்மோஹன் சிங்கிற்கு ஒரே மாற்றாக மோதி காணப்பட்டார். தினசரி ஏமாற்றங்களால் சூழப்பட்ட ஒவ்வொரு இந்தியனையும் பிரதிநிதித்துவப்படுத்தும், அரசியல் முன்மாதிரியாய் அவர் விளங்கினார். ஊழல் அமைப்புக்கெதிராக கொடி பிடிக்கும் கோபக்கார இளைஞனாக – 70களின் அமிதாப் பச்சன் போன்று கருத்தப்பட்டார்.
பாஜக மோதியை மையமாக கொண்டுள்ளது. தற்போதைக்கு அது நல்லதே. குறிப்பாக மத்தியில். தலைமைக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நரேந்த்ர மோதியின் எழுச்சிதான், பாஜகவை வல்லமைமிக்க சக்தியாக மாற்றி, ஐ.ஜ.கூட்டணியின் 2ஆம் ஆட்சியை வேரோடு பிடுங்கியெறிந்து, பாஜகவை அதற்கு மாற்றாக ஸ்தாபித்தது.
அடிமட்ட அளவிலேயே மாற்றத்தை கொண்டு வந்து வித்தியாசத்தை ஏற்படுத்தினால்தான் உபி, பீஹாரில் தேர்தலில் ஜெயித்து பாஜக ஆட்சியை பிடிக்கமுடியும். அதற்கு நரேந்த்ர மோதியின் பிரசாரம் எனும் சந்தோஷக்காற்றை வீச வைக்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிப் பேச்சுக்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்த வேண்டும். இதில் உள்ளூர் பாஜக எம்பிக்கள் ஆக்கபூர்வமாக உதவக் கூடியவை என்னென்ன? அவர்களால் மக்களின் பிரச்னைகளை தீர்க்க முடியுமா? மக்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அவர்கள் ஓடி வருவார்களா? நீர், மின்சார தட்டுப்பாடு மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகளின் அடிப்படை வசதிகளைத் தீர்க்க வருவார்களா?
தத்தம் தொகுதிகளில் அவர்கள் கட்டுமானப் பணிகளை செய்தாலும் கூட, அதை பளிச்சென மக்கள் பார்வைக்கு தெரிய வைக்க என்ன செய்ய வேண்டும்? ஊடகங்கள் பாஜகவுக்கு தீவிர விரோதமானவை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் தங்கள் சாதனைகளை வெளிப்படுத்த முன்னிலை ஊடகங்களை சார்ந்திருக்கக் கூடாது. தன் சொந்த ஊடகப்பிரிவையே கையிலெடுத்து, பல்வேறு வகைகளை பயன்படுத்தி சாதனைகளை பரப்பி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு விநியோகிக்க வேண்டும். ஆவண காட்சி படங்களை தயாரித்து அதை, கிராம, தாலுக்கா வாரியாக மக்களுக்கு காட்டி, பின்னர் அது தொடர்பாக கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். வீதி நாடகங்களுக்கும் ஏற்பாடு செய்வது நல்ல யுக்தி. பாஜக தன்னார்வலர்கள் வீட்டுக்கு வீடு பிரசாரம் சென்று, மக்களிடம் பேசி, அவர்களின் உள்ளூர் பிரச்னைகளை கேட்டு, பட்டியலிட்டு, அவற்றை களைவதில் தொடர் ஆர்வம் காட்டி, காணப்பட்ட தீர்வை ஊடகப்பிரிவின் மூலம் மக்களுக்கு விளக்க வேண்டும். இவையெல்லாம் தொடர் நிகழ்வாக இருத்தல் நல்லது.
நரேந்திர மோதி வெறிபிடித்தவர் போல உழைக்கிறார். ஆனால் அவர் மட்டுமே மாநில அளவிலும் வெற்றியை ஈட்ட போதுமானவர் அல்ல. இது நிகழ, மாநில அளவில் தலைவர்கள் கடுமையாக உழைத்து மக்களுடன் ஐக்கியமாக வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தி மக்களுக்கு, தாங்கள் தேர்தலுக்கு பின்னரும் மறக்கப்படாமல் கவனிக்கப் படுகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைக்கக் கூடாது. இதில் பெரும்பாலானவை தொடர்பு இடைவெளியே!
இன்றும் காங்கிரஸ் தான் நாட்டை ஆளுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் தீவிர விரோத ஊடகங்கள், பாஜகவின் சாதனைகள் வெறும் வசைபாடலாகத் தான் முடியும் என்று பேசி வருகின்றன. விரைவில் இந்நிலையை வேரோடு பிடுங்கியெறிய வேண்டும்
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.