பெபனாக்கி தொடரும் மேரு யந்திரமும் :

 எந்திரன் படம் பார்த்தவர்கள் பலர் இதைப் பார்த்திருக்கலாம்! ரஜினிகாந்த் எந்திர மனிதனை உருவாக்கும் நிலையில் அதில் பதிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து கணினித் திரையில் வேகமாக ஓடும் போது ஒரு நொடி ‘பெபனாக்கி தொடர் ‘ (FIBANOCCI SERIES) என்று தோன்றும்!! அதை ஒரு கணினியின் ப்ரோக்ராம் தொடர்பான நிலையில் சங்கர் பயன்படுத்தியிருப்பார்!!

இது என்ன பெபனாக்கி தொடர்? உயர்கணிதம் மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் உயர் கணிதத்தில் இது போலப் பலப் பல எண் தொடர்கள் உள்ளது!அவை EULER SERIES, FOURIER SERIES போன்ற பல பெயர்களில் வழங்கப்படும்!! மிகவும் சிக்கலான கணக்குகளை இத்தொடர்களின் மூலம் சுலபமாக விடுவிக்க முடியும்!! இது போல ஒரு தொடரே பெபனாக்கி தொடராகும்!!

இத்தொடரை உருவாக்கியவர் கிபி 1175 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் பிறந்த பெரும் கணித மேதையாவார்!! அவரால் உருவாக்கப்பட்ட தொடர்தான் இது!! இது கணினி சம்பந்தப்பட்ட C LANGUAGE போன்றவற்றிலும் பலப் பல விஞ்ஞான விஷயங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது!! இந்தத் தொடரின் வரிசை :

1, 1, 2, 3, 5, 8, 13, 21, …………… என்னும் வரிசையில் வருகிறது!!

இந்த வரிசையில் உள்ள எண்களின் விகிதம் 1.618 என்னும் விகிதப்படி அமைந்துள்ளது!! அதாவது முன் எண்ணும் அதன் அடுத்த எண்ணும் அமைந்துள்ள விகிதமே அது!! இந்த விகிதம் ஒரு குறிப்பிட்ட எண் வரையிலும் சிறிய அளவில் மாறினாலும் (உம்- 1.618, 1.6185, 1.6183 இப்படி ) ஒரு பெரிய எண்ணுக்குப் பின் ஒரே அளவாக அதே எண் 1.618 வருகிறது!! இந்த விகிதத்தின் அடிப்படையில் பலப் பல இயற்கையில் உள்ள விஷயங்களும், பலப் பல கணிதக் கணக்குகளும் அமைந்துள்ளதால் இது தங்க விகிதம் ‘GOLDEN RATIO’ என்றே அழைக்கப்படுகிறது!!

சரி இந்த GOLDEN RATIO வுக்கும் நமது ஹிந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?? உள்ளது!! நமது மதத்தில் காலங்காலமாகப் பயன்பாட்டில் இருந்து வருபவை பல யந்திரங்கள் மற்றும் சக்கரங்கள்!! இவை ஸ்ரீ சக்கரம், மேரு யந்திரம் போன்று பல வகைப்படும்!! ஆச்சரியம் என்னவென்றால் இவ்வாறான சக்கரங்களில் உள்ள பலப்பல முக்கோணங்களில் ஒரு அளவையும் அடுத்த பெரிய அளவையும் எடுத்துக் கொண்டு பார்த்தால் அதன் விகிதம் இதே 1.618 என்றே அமைந்துள்ளது!! அதே போல சம அளவில்லாத முக்கோணத்தில் பெரிய அளவின் மடங்கு சிறிய அளவை விட 1.618 என்ற விகிதத்திலேயே அமைந்துள்ளது!! மேரு யந்திரத்தில் மற்றெந்த யந்திரங்களிலும் இதே அளவு தான் உள்ளது!!! இவை பலப் பல ஆராய்ச்சியாளர்களால் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது!!

12 ஆம் நூற்றாண்டில் இருந்த ஒரு கணித அறிஞர் கண்டுபிடித்த ஒரு விகிதம் அதற்கும் பற்பல நூற்றாண்டுகள் முன்பே நமது மதத்தின் சாஸ்திரங்களில் உரைக்கப் பட்டுள்ள யந்திரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது தற்செயல் அல்ல!! அவை பற்றிய அறிவு நமது முன்னோர்களுக்கு நிறையவே இருந்தது என்பதே ஹிந்து மதம் சொல்லும் உண்மையாகும்!!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...