தூர்தர்ஷன் மற்றும் ஆல்இந்தியா ரேடியோவின் பழைய நிகழ்ச்சிகளை இனி ஸ்மார்ட்போனில் கேட்பதற்கு வசதியாக புதிய அப்ளிகேஷன் உருவாக்கப் பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் போன்றவற்றில் அந்தகாலத்தில் அருமையான நிகழ்ச்சிகள் ஒலி பரப்பரப்பட்டுவந்தன.
இனிமையான பழையபாடல்கள் ஒலித்தன. ஆனால் இவற்றை எல்லாம் இனி கேட்க முடியுமா என்றெல்லாம் நம் வீட்டுபெரியவர்கள் கவலைப் படுவதை நாம் பார்த்திருப்போம். அந்தகால பழைய நிகழ்ச்சிகளை பார்த்தால், கேட்டால் எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் இன்றைய இளைய தலைமுறையிடமும் உள்ளது. நமது இந்தகவலை, ஏக்கம், ஆர்வம் எல்லாவற்றையும் தீர்த்துவைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவின் பழைய நிகழ்ச்சிகளை செல்போனில் கேட்பதற்கான அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற புத்தகவெளியீட்டு விழா ஒன்றில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அந்த புத்தகம் தூர்தர்ஷன் உள்ளிட்டவற்றில் ஒளிபரப்பப்பட்டவற்றின் பழைய ஒலிப் பதிவுகள் எங்கு கிடைக்கும் என்பதை பற்றிய புத்தகமாகும். இதனை வெளியிட்டு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
ஆகாசவாணியில் சுமார் 4 லட்சம் ஒலிப் பதிவுகள், தூர்தர்ஷனில் சுமார் 3 லட்சம் ஒளிப்பதிவுகள் ஆவணங்களில் உள்ளன. தற்போது அது பொது மக்களுக்கு கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தனை அற்புதமான காலபொக்கிஷம் மக்களுக்கு பல்வேறு புதிய வரலாறுகளை நினைவில் கொண்டு வரும். இவை அனைத்தையும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.