37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற பிறகு , 218 சட்டசபை தொகுதியே எங்கள் இலக்கு என்று அலம்பு கொடுத்து வந்த அ.தி.மு.க, மாநகராட்சி , நகராச்சி , வார்ட் கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டியிடுவதற்கு அஞ்சும் விதமாக நடந்து கொள்வது, அவர்கள் மேல் அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா?, அல்லது பாஜக.,வை கண்டு அச்சமா என்றுதான் விளங்கவில்லை.
தமிழகத்தில், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் காலியாக உள்ள, 2,130 உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலை அவசர அவசரமாக 18ம் தேதி என்று அறிவித்தது தமிழக தேர்தல் ஆணையம். அதாவது ஆளும் மாநில அரசு தங்கள் வேட்பாலர்களை எல்லாம் முன்பே தேர்வு செய்து வைத்துக்கொண்டு. கொடுக்க வேண்டிய இலவசங்களை எல்லாம் கொடுத்துவிட்டு. எதிர் கட்சிகளுக்கு சரியான வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூட நேரம் தராமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் தில்லுமுல்லுகளை எல்லாம் முன்பே மோப்பம் பிடித்துவிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் பாஜக மட்டுமே வலுவான எதிர்க்கட்சியாக களம் இறங்கியுள்ளது. பாஜக.,வால் மட்டுமே பல தொகுதிகளில் தங்களுக்கு கடும் போட்டியை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்துள்ள அ.தி.மு.க , பாஜக வேட்பாலர்களை மிரட்டுவதும், உருட்டுவதும் , அடிபணியும் வேட்பாளர்களுக்கு லட்சங்களையும், கோடிகளையும் அள்ளிவீசி வேட்புமனுவை வாபஸ் பெற வைப்பதும் . வேட்பு மனுவை இவர்களே போலியாக கையெழுத்திட்டு வாபஸ் வாங்கி விட்டதாக அறிவிப்பதும், வேட்பாளர் சரியாக வேட்புமனுவை நிரப்பி இருந்தால் கூட இவர்களே எதாவது வார்த்தைகளை கூடுதலாக சேர்த்து நிராகரிப்பதும். உதாரணத்துக்கு 6வது வார்டு என்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தால் வேண்டும் என்றே 6 க்கு பக்கத்தில் கூடுதலாக 1 சேர்த்து 16வாது வர்ட்டாக மாற்றிவிடுவதும் , பிறகு அப்படி பட்ட வார்டே இல்லை வேட்பு மனு தவறாக நிரப்பப்பட்டுள்ளது என்று இவர்களே நிராகரித்து விடுவதும் என்று ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாகத்தான் பாஜக.,வின் நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள், சென்னை 168வது வார்ட் வேட்பாளர் நீதிசேவியர், மேல் மனையனூர் ஊராட்சி மன்ற வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கடைசி நேரத்தில் வேட்ப்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இதில் பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது அவர் மனைவிக்கே தெரியவில்லை. மதுரை 85-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹரிஹரன் கையெழுத்தை போலியாக போட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதேபோன்று தூத்துக்குடி, கோவை மாநகராட்சி வேட்பாளர்களை வளைக்கும் முயற்ச்சி இறுதியில் தோல்வியடைந்துள்ளது.
எத்ர்க்கட்சிகளே தங்களை பாராட்டும் விதமாக ஆட்சி செய்து வருவதாக கூறிக்கொள்ளும் அதிமுக, 45 சதவிதம் ஓட்டு வங்கி தங்களுக்கு இருப்பதாக கூறிக்கொள்ளும் அதிமுக, பாஜக கூட்டணியை கண்டு அஞ்சுவதேன்?. முன்பு தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.,களை எல்லாம் ஆசை வார்த்தை காட்டி தனி அணியாகவே செயல்பட வைத்தவர்கள். இப்போது தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே எதிர்க் கட்சி வேட்பலர்களை ஏதோ ஒரு விதத்தில் ஓரம்கட்டி போட்டியின்றி வெற்றி பெற முயல்வது ஏற்க்கதக்கதல்ல.
ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம், இனி காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மத்தியில் ஆழ முடியும் , இருப்பினும் கூட்டாட்சியே தவிர தனித்து ஆட்சி என்பது கனவிலும் நடக்காது. பாஜக.,வால் கூட்டணி ஆட்சியை கூட அமைக்க முடியாது என்ற ஆருடத்தை எல்லாம் மக்கள் மன்றம் பொடிப் பொடியாக்கி விட்டது. இன்று பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து விட்டது, காங்கிரசோ எதிர்க்கட்சிக்கு கூட லாயக்கு இல்லை என்று தூக்கி எறியப்பட்டுள்ளது. ஏன் இங்கு தமிழகத்தில் மத்தியில் பதினைந்து வருடம் , மாநிலத்தில் மாறி மாறி 5 ந்து வருடம் என கொலாய்ச்சிய திமுக இன்று எதிர்க் கட்சி கூட இல்லை, நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெற முடியவில்லை, நகராட்சிக்கான இடைத்தேர்தலில் கூட போட்டியிட நடுங்கி பின்வாங்கியுள்ளது. இதுதான் உயிர்ப்புடன் கூடிய ஜனநாயகம், தெய்வீகம் நிறைந்த ஜனநாயகம், இங்கே எல்லோருக்கும் காலங்கள் உண்டு, ஆனால் தேசத்தின் மீது பற்றும் , நம்பிக்கையும் கொண்டவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் என்பது உண்டு.
பாஜக.,வுக்கு மத்தியில் எதிர்காலம் பூத்துவிட்டது. மாநிலத்தில் நிச்சயம் உண்டு எனவே தேசத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் உண்மை நம்பிக்கையையும், பற்றையும் வைப்போம், நிகழ்காலம் எப்படியோ போகட்டும், எதிர்காலம் நமக்காகட்டும்.
தமிழ் தாமரை VM வெங்கடேஸ்
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.