இந்த ஆண்டு அமைதி க்கான நோபல்பரிசு இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு கொடுக்கப்படுகிறது . 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவை சேர்ந்த கைலாஷ்
சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். அமைதிக்கான நோபல்பரிசு பெறுவதில் அன்னை தெரசாவுக்கு பின்னர் அமைதி விருதை இந்தியர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகளவில் குழந்தை தொழிலாளர்களே இருக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் அதனை ஒழிக்க பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல்பரிசுக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் நோபல்பரிசு பெறும் 8வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அன்னை தெரசாவுக்குப் பின், அமைதிக்கான நோபல்பரிசு பெறும் இந்தியர் கைலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் 1954 ஜன., 11ம்தேதி பிறந்தார். 1990ல் "பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தைதொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, கல்விகற்க உதவியுள்ளார்.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.