வங்க கடலில் உருவான ஹுட் ஹுட் புயல் ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஒடிஸாவின் கோபால்பூர் இடையே ஞாயிற்றுக் கிழமை மதியம் கரையைக்கடந்தது. இதில், இரு மாநிலங்களிலும் சேர்த்து 6 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரத்தில் விசாகப் பட்டினத்திலும், ஸ்ரீகாகுளத்திலும் மரம்விழுந்து 2 பேரும், மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவருமாக 3 பேர் உயிரிழந்தனர்.
ஒடிஸா மாநிலத்தில், புரிமாவட்டத்தில் மீனவர் ஒருவரும், கேந்திர பாராவில் சனிக் கிழமை படகு கவிழ்ந்ததில் நீரில்மூழ்கி ஒரு சிறுவனும், சத்பயா பகுதியில் பவுன் சகாடி ஆற்றில் மற்றொரு படகு கவிழ்ந்ததில் நீரில்மூழ்கி ஒரு சிறுமியுமாக 3 பேர் உயிரிழந்தனர். இரு மாநிலங்களிலும் நேரம் செல்லச்செல்ல புயலின்வேகம் படிப்படியாகக் குறைந்துவருகிறது.
ஆந்திர கடலோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், ஸ்ரீகா குளம், விஜய நகரம் உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டது. மரங்கள் வேருடன்சாய்ந்தன. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.
பலத்தகாற்றால் கடல் அலை 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் உயரம்வரை எழுந்தது. புயல் அச்சுறுத்தல் உள்ளதாக 5 மாவட்டங்களிலும் உள்ள 356 கிராமங்கள் கணிக்கப்பட்டு அந்தக்கிராம மக்களுக்காக 300 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. முன்னதாக, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், ஸ்ரீகா குளம், விஜய நகரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 90,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஒடிஸாவில் புயல்காரணமாக முன்னெச்சரிக்கையாக சுமார் 1.56 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு 1,690 மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
மாநிலத்தின் தென்மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப்ணியில் ராணுவம்: ஆந்திரத்தில் மக்களை மீட்க விசாகப் பட்டினத்தில் 6 ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர் . அதுபோல, ஒடிஸாவிற்கு 5 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
மீட்பு பணியில் தேசியபேரிடர் மீட்பு படையை சேர்ந்த 44 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த குழுக்களில் மொத்தம் 2,000 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். மீட்புப்பணியில் 220 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.