நரேந்திரமோடி பிரதமராகி ஆறுமாதங்கள் ஆன நிலையில் நகர்ப் புறங்களில் அவருக்கு மக்களிடையே ஆதரவு அப்படியே உள்ளதாக பெங்களூரை சேர்ந்த போர்த்லைன் டெக்னாலஜிஸ், அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கணக் கெடுப்பில் பங்கேற்ற நகர்ப்புற மக்களில் 82 சதவீதம் பேர், பிரதமர் என்று ஒருவர் தனது வேலைகளை பார்த்து கொண்டிருப்பதாக உணர தொடங்கி யுள்ளதாக கூறியுள்ளனர்.
அதே நேரம் கருப்புபணத்தை மீட்பது, கருப்பு பண முதலைகள் பெயரை வெளியிடுவது போன்றவற்றில் மோடி, மீது 84 சதவீதம் பேருக்கு நம்பிக்கை உள்ளது .பெரும்பாலனவர்கள் கருப்பு பண விவகாரத்தில் மோடி நடவடிக்கை எடுப்பார் என அதிகம் நம்புகின்றனர்.
மோடி மீது நகர்ப் புற நடுத்தர வர்க்கத்தினர் நம்பிக்கை வைத்துள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டெல்லி பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவுதுறை பேராசிரியர் பிரதீப்குமார் தத்தா கூறுகையில், "நகர்ப்புற மக்களிடையே மோடி அரசின் தேனிலவுக்காலம் முடிவடையவில்லை. அதேநேரம் கிராமப் புறங்களில் இந்நிலை எப்படி உள்ளது என தெரியவில்லை" என்றார்.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Leave a Reply
You must be logged in to post a comment.