ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இரண்டுகட்ட தேர்தல்களிலும் 70 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகி உள்ளன. 3ம் கட்டதேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் பயங்கரதாக்குதல் நடத்தியுள்ளனர்.
யூரிசெக்டார் பகுதியில் ராணுவ முகாம் மீது குறிவைத்து நடத்திய தீவரவாதிகளின் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள், 3 காவல் துறையினர் உயிரிழந்தனர். இதேபோல் ஷோப்பியான், மொஹரம், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடந்தது. இதில்மொத்தம் 23 பேர் உயிரிழந்தனர். 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவதளபதி தன்பீர் சிங் அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக அவர் காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.
தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவி த்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த வீரர்களுக்கு நாட்டுமக்கள் அனைவரும் வீர வணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்களம் தருவதாக குற்றம் சாட்டினார். தீவிரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்த முடியா விட்டால், அந்நாட்டுக்கு உதவ இந்தியா தயராக உள்ளதாக தெரிவித்தார்.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.