“இந்த புதிய உலகின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்,” என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
காசிக்கும், தமிழகத்துக்கும் உள்ள வரலாற்று தொடர்புகளை விளக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நேற்று நடந்த காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சிக்கு சோமாலியா, ருவாண்டா ஜமைக்கா உள்ளிட்ட 55க்கும் மேற்பட்ட நாடுகளின் துாதர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அழைத்து வந்தார். அவர்கள், காசி தமிழ் சங்கமம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
இந்த நிகழ்ச்சியில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியாவிற்கும், உலகிற்கும் இடையிலான உறவில், வரலாற்று ரீதியாக நாம் முந்தைய காலங்களில் உலகிற்கு தொழில்நுட்பத்தின் ஆதாரமாக இருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
அதை, நாம் இன்று மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக தான் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் வழியே இந்த புதிய உலகின் சவால்களுக்கு மாணவர்களை தயார்படுத்துவதே நோக்கம்.
நம் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். புதிய கல்வி கொள்கை வாயிலாக பல புதிய தொழில் துறைகளை நாம் கொண்டு வந்துள்ளோம்.
உதாரணமாக விண்வெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளை சொல்லலாம். பிரதமர் கூட தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியம் என்று தான் கூறுகிறார். எனவே, பாரம்பரியம் தொழில்நுட்பத்திற்கும் உதவும், அங்குதான் நம் இந்திய அறிவு மாற்றத்தை ஏற்படுத்தும்.
அப்படித்தான் யோகா கலையை உடற்பயிற்சியாக மக்கள் அங்கீகரித்துள்ளனர். பாரம்பரிய மருத்துவமும் அப்படித்தான். அதன் மீது, இந்தியாவுக்கு வெளியே மக்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தனர்.
எனவே, பாரம்பரிய மருத்துவத்தின் அவசியத்தை புரிந்துகொண்டு அதை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்வது, நம் கைகளில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |