”இந்திய பொறியாளர்களால் கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தை, குறைத்து மதிப்பிடக்கூடாது,” என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், பா.ஜ., — எம்.எல்.ஏ., வானதி தெரிவித்தார்.
பா.ஜ., வானதி: டி.சி.எஸ்., நிறுவனத்தின், சமூக பொறுப்பு நிதியில், அரசு ஐ.டி.ஐ.,க்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டன. அதை இப்போதும் தொடர வேண்டும். படித்த இளைஞர்கள் வேலை வேண்டும் என்கின்றனர்; நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் தேவை என்கின்றனர்.
வேலை தேடும் இளைஞர்களுக்கு திறன் இருப்பதில்லை. படித்த இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும்.
அமைச்சர் கணேசன்: படித்த இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காகவே, ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, 42 அரசு ஐ.டி.ஐ.,க்கள் துவக்கப்பட்டுள்ளன. டாடா நிறுவனத்துடன் இணைந்து, ஐ,டி.ஐ.,க்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 239 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, 2.49 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அப்பாவு: படித்த இளைஞர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான இணைப்பு பாலம் தான், நான் முதல்வன் திட்டம்.
வானதி: அந்த பாலத்தை வலுவாக அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
அமைச்சர் சிவசங்கர்: சமீபத்தில் பாம்பனில் கட்டப்பட்ட பாலம் போல் இல்லாமல், திராவிட மாடல் பாலம் சிறப்பாக, உறுதியாக இருக்கும்.
வானதி: பாம்பன் ரயில் பாலம் என்பது, இந்தியாவில் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து துாக்கு பாலம். இந்திய தொழில்நுட்பத்தில், இந்திய பொறியாளர்களின் உழைப்பில் கட்டப்பட்டது. உங்கள் சித்தாந்தத்திற்காக, நமது பொறியாளர்கள், தொழிலாளர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடக்கூடாது; பெருமைப்பட வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று பேசினீர்கள். ஆனால், தமிழகம் பின்தங்கியிருப்பது போலவும், தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வங்கள் போல், உங்கள் நண்பர்கள் வெளியே பேசுகின்றனர். நீங்களும் தமிழகத்தை குறைத்துப் பேச வேண்டாம். நாங்களும் உங்களை குறைத்து பேசவில்லை.
வானதி: சட்டசபைக்கு உள்ளே எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதைவிட, எங்கள் கட்சிக்காரர்கள் வெளியே பேசுவதற்கு, அமைச்சர் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் எங்கும் தமிழகத்தை குறைத்து மதிப்பிடவில்லை; பெருமைப்படுகிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |