ஆண்கள் கையில் வரும் வருமானம், ‘டாஸ்மாக்’க்குக்கே செலவாகிறது

”நடப்பாண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

பா.ஜ., – வானதி சீனிவாசன்: மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை, இணையவழியில் விற்பனை செய்யும்திட்டம் உள்ளதா?

அமைச்சர் பெரியகருப்பன்: மகளிர் சுய உதவி குழுக்களின், 69 தயாரிப்புகள், ஏற்கனவே இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. சில மாவட்டங்களில், சுய உதவி குழுக்களால் உற்பத்திசெய்யப்படும் பொருட்களை, மின்னணு முறையில் விற்பனை செய்ய, அந்தந்த மாவட்டங்களில் இணையதளங்கள் உருவாக்கப்பட்டு, விற்பனை நடந்துவருகிறது.

சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும், தரமுள்ள பொருட்களை ஒருமுகப் படுத்த, பிரத்யேக மின் னணு இணையதள முகப்பு உருவாக்க, தற்போது முடிவு செய்யப் பட்டுள்ளது. அரசு அலுவலகங்களின் பயன்பாட்டுக்கு தேவையானப் பொருட்களை, சுய உதவிக்குழுக்களிடம் வாங்குவதற்கான வழிமுறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்: பெண்கள்கையில் வரும் வருமானம் முழுதும் குடும்பத்திற்கு செலவிடப்படுகிறது. ஆண்கள் கையில் வரும் வருமானம், பீடி, சிகரெட், ‘டாஸ்மாக்’ என செலவாகிறது; அனைத்து ஆண்களையும் கூறவில்லை. கடந்த, 2016ல் மத்தியஅரசு சார்பில், அரசு சார்பு நிறுவனங்கள் மின்னணுவழியாக பொருட்களை வாங்க, பிரதமர் உத்தரவிட்டார்.

அதன்படி, மத்திய அரசு இணைய தளம் வழியே, 1 லட்சம் கோடி ரூபாய் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு, எந்தமுன்னணி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது? அமைச்சர்கள், சபாநாயகர் அலுவலகத்திற்கான பொதுபயன்பாட்டு பொருட்களை, மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் வாங்க, அரசு கொள்கைமுடிவு எடுக்க வேண்டும்.

அமைச்சர் பெரியகருப்பன்: மகளிர் குழு உற்பத்தி செய்த பொருட்களை, அரசு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய, மத்திய அரசின் ‘ஜெம்’ இணையதளத்தில் சந்தைப்படுத்தப்படுகிறது. இதுவரை, 116 மகளிர் சுய உதவிக் குழு பொருட்கள், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வழியாகவிற்பனை செய்யப்படுகின்றன.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு 20 ஆயிரம்கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை தாண்டி, 21 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்தஆண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்வழங்க, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

ஆண்கள் கையில் வரும் பணம், பீடி, சிகரெட், டாஸ்மாக் என செலவிடப் படுவதாக, வானதி சீனிவாசன் கூறியதற்கு, தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சலசலப்பு ஏற்பட்டது.

பின், வானதி சீனிவாசன், ”அனைத்து ஆண்களையும் கூறவில்லை,” என கூறியதால், பிரச்னை முடிவுக்கு வந்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...