கூட்டணி தர்மத்துக்காக ஒரு சில விஷயத்தில் சமரசம் செய்து கொண்டதாக பிரதமர் தெரிவித்திருப்பது அரசினுடைய தவறுகளை மறைப்பதற்கான சாக்கு போக்கே என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார் .
அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டி மிகவும் ஏமாற்றமாக அமைந்திருந்தது. கூட்டணி ஆட்சிக்காக சில விஷயங்களில் சமரசம் செய்து கொண்டதாக அவர் கூறியிருப்பது வெறும் சாக்குப் போக்குதான். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒரு போதும் எந்த விஷயத்திலும் சமரசம் செய்து கொண்டதில்லை. நேர்மையான சிறந்த நிர்வாகத்தை முக்கியமாக கருதி செயல்பட்டோம்.
ஊழலைத் தடுக்கமுடியவில்லை. இந்த விஷயத்தில் அரசின் இயலாமையை மறைக்கவே கூட்டணி கட்சிகளின் நெருக்கடி என்று சாக்குப்போக்கு சொல்கிறார் பிரதமர்.
கூட்டணி ஆட்சியில் நிர்வாகத்திலும் கொள்கைகளை அமல்படுத்துவதிலும் உள்ள சிக்கல்களை நாங்களும் நன்கு அறிவோம்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளுக்கு கூட்டணி கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியை ஒரு காரணமாக கூறக் கூடாது. கூட்டணி தர்மத்துக்காக சமரசம் செய்து கொண்டோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, எங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதை ஏற்கவில்லை. கூட்டணி கட்சி ஒப்புக்கொண்டிருந்தால் தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்திருப்போம். கூட்டணி நெருக்கடியால் அதை எங்களால் செய்ய முடியவில்லை. கூட்டணி நெருக்கடி இந்த அளவில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஊழல் விஷயத்தில் எப்படி கூட்டணி நெருக்கடியை காரணம் காட்ட முடியும். ஊழலற்ற நிர்வாகத்தை நடத்துவதில் எப்படி சமரசம் செய்து கொள்ள முடியும்?
ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடும். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர பாஜக தொடர்ந்து பாடுபடும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை குறிப்பிட வேண்டும். அதற்கேற்ற வகையில் தேர்தல் சட்ட விதிகள் திருத்தப்பட வேண்டும்.
சுதந்திரத்துக்குப் பின் முதல் 30 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி ஊழலுக்குவித்திட்டது. அதனால் தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டினார். அதுவே ஒரு கட்சி அரசியலிருந்து பல்வேறு கட்சிகளை கொண்ட அரசியலுக்கு வித்திட்டது என்றார் அத்வானி.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.